திருவள்ளூர் தனி தொகுதியில் அதிமுக கூட்டணியில்
தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார். இந்நிலையில் தமிழகம் முழுவதும்
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை
ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி
நேற்று திருவள்ளூர் தனி தொகுதி தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பியை ஆதரித்து வாக்கு
சேகரிக்க திருவள்ளூர் வருகை தந்தார்.
அவரை முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா,
பா.பென்ஜமின், மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், முன்னாள் எம்பிக்கள் வேணுகோபால்,
திருத்தணி கோ.அரி, மாவட்ட செயலாளர்கள் சிறுணியம் பலராமன், அலெக்சாண்டர், திருவேற்காடு
பா.ஸ்ரீனிவாசன், ஆகியோர் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து புரட்சி தலைவர்,
புரட்சி தலைவி, கேப்டன் விஜயகாந்த் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை
செலுத்தினார்.
இதில் பேசிய கழக
பொதுச்செயலாளர் புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சி கலைஞர் ஆசி பெற்ற பலம் வாய்ந்த
கூட்டணியில் திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்
கு.நல்லதம்பியை கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்
என கேட்டுக் கொண்டார். மேலும் வேட்பாளர் மிக எளிமையானவர்... அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தேமுதிக சார்பில் போட்டியிடுவதால் முரசு
சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டு வாக்கு சேகரித்தார்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியே பாஜக
கூட்டணியில் இருந்து விலகியதாகவும், சுயநலத்தோடு யோசித்திருந்தால் கூட்டணியில்
தொடர்ந்திருப்போம் என்றும் அதிமுக கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு அடி பணியாத கட்சி.
தேசிய கட்சியோடு கூட்டணி வைத்து எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழ்நாடு வளர்ச்சி
பெறுவதற்கு ஏதுவாக அதிமுக தேசிய கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை என தெரிவித்தார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தீர்களோ அதை சொல்லி ஓட்டு
கேளுங்கள்... என்னைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். நீட் தேர்வை
கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் திமுக தான் என்றும் மீண்டும் அவர்களே நீட் தேர்வை
ரத்து செய்வோம் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்றும் தெரிவித்தார்.
திருவள்ளுரில் பிரமாண்டமான மருத்துவ கல்லூரி
மருத்துவ மனை வல்லரசு நாடுகளில் கூட பார்க்க முடியாது எனவும், 11 அரசு மருத்துவ
கல்லூரி கொண்டு வந்தோம் எனவும், திமுக 3 ஆண்டுகளில் ஒரு மருத்துவ கல்லூரி கூட
கொண்டுவரவில்லை. எனவும், திமுக ஆட்சி இருண்ட ஆட்சி, அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்றும், திருவள்ளூர்
மாவட்டத்தில் பல்வேறு மேம்பாலங்கள், தடுப்பணைகள் கொண்டு வந்தோம். ஆனால் அதிமுக
ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தற்போது ஆமை வேகத்தில்
நடைபெறுகிறது என்றும் குற்றம் சாட்டினார். அதிமுக
சேவை செய்ய வந்த கட்சி.. ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்... என்றும், விடியாத திமுக
ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என கழக பொதுச்செயலாளர் சொல்ல தொண்டர்கள்
திரும்ப சொல்லி கூட்டத்தை நிறைவு செய்தார் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி
பழனிச்சாமி. இந்த கூட்டத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட அதிமுக
தேமுதிக புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பல்லாயிரக்கணக்கானோர்
கலந்து கொண்டனர்.
படச்செய்தி
திருவள்ளூரில்
நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திருவள்ளூர் தனி தொகுதி தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பியை
ஆதரித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்கு சேகரித்தார்.