நெமிலி மத்திய ஒன்றியத்தில் திமுக வேட்பாளர்

Published: 08/04/2024 14:23 PM Updated: 08/04/2024 14:23 PM
Ads
news-banner

நெமிலி மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமையில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுகவில் போட்டியிடும் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து நெமிலி மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமையில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

மாவட்ட கவுன்சிலரும், மகளிர் அணி துணை அமைப்பாளருமான சுந்தரம்மாள் பெருமாள் முன்னிலை வகித்தார்.  ஒன்றிய அவைத் தலைவர் நரசிம்மன் வரவேற்றார். தேர்தல் பிரச்சாரத்தில் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் பெருமாள் பேசியது,

 

மகளிருக்கு இலவச பேருந்து திட்டம்,  மகளிர் உரிமைத் தொகை,  காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லை.  தமிழகத்தில் மட்டுமே செயல்படுகிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்றுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லாத திட்டங்களையும் மக்கள் மனம் அறிந்து நிறைவேற்றி வருகிறார்.  பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும்.  வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு உதயசூரியன் சின்னத்தில்  வாக்குகள் அளித்து அவரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

 

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, ஒன்றிய பொருளாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதி சம்பத், நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், ராஜா, பொன்னையன், சதீஷ், எல்லப்பன், முரளி முகேஷ், ஸ்டாலின், இளங்கோவன், வேலாயுதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மத்திய ஒன்றியத்துக்குட்பட்ட பெரப்பேரி, கோடம்பாக்கம், சயனபுரம்,   மகேந்திரவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மத்திய ஒன்றிய செயலாளர் பெருமாள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து நெமிலி மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் ஒன்றிய செயலாளர் பெருமாள்,  மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.