தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொண்டு வந்துள்ள மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் வெளி மாநிலங்கள் மற்றும்
வெளிநாடுகளில் பின்பற்ற தொடங்கியுள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு
பேசினார்.
திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு கிராமத்தில் இந்தியா கூட்டணி வேலூர் பாராளுமன்ற
தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆதரித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு
பிரச்சாரம் மேற்கொண்டார்.
வருகை தந்த அமைச்சருக்கு மாவட்ட
மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன் தலைமையில் பட்டாசுகளை வெடித்தும், ஆள் உயர மாலை
அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.
அப்போது அமைச்சர் எ.வ.வேலு
பேசியதாவது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள மாணவர்களுக்கான காலை
சிற்றுண்டி திட்டம் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பின்பற்ற
தொடங்கியுள்ளது. இந்தியாவுக்கே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டியாக
உள்ளார் என்று பேசி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து
வாக்கு சேகரித்தார்.
கூட்டத்தில் திமுக மாவட்ட
செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி, ஆம்பூர் சட்டமன்ற
உறுப்பினர் வில்வநாதன், ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, ஒன்றிய
செயலாளர்கள் தாமோதரன், ஞானவேலன், ஒன்றிய அவைத் தலைவர் பழனி,
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் எஸ் பிரபு, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர்
ஓ.எம்.பிரகாசம் உட்பட திமுக கழக நிர்வாகிகள் தோழமை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்
பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே
நிம்மியம்பட்டு கிராமத்தில் இந்தியா கூட்டணி வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக
வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆதரித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உதயசூரியன்
சின்னத்தில் வாக்குசேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.