போளூரில் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

Published: 17/04/2024 13:36 PM Updated: 17/04/2024 13:36 PM
Ads
news-banner


திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போளூர் பேரூராட்சியில் ஆரணி பா.ம.க., வேட்பாளர் கணேஷ் குமார் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். பாமக வேட்பாளர் அ.கணேஷ் குமார் போளூர் நகர செயலாளர் கே.சி.குமரன் தலைமையில் பாமக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மேளதாளத்துடன் ஆரத்தி எடுத்து வெகு விமர்சையாக வரவேற்பு அளித்தனர். போளூர் பேரூராட்சி பஜார் வீதியில் தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். அப்போது பேசுகையில் குடிநீர் திட்டம் ரொம்ப பிரச்சனை இந்த பகுதியில் உள்ளது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு திட்டம் நல்ல திட்டங்களை கொண்டு வருவோம், மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்று வாக்கு சேகரித்தார்.

 

அப்போது பாமக மாநில பொது குழு உறுப்பினர் கலைமணி, மாவட்ட வன்னியர் சங்க தலைவர் பாசறை பாபு, மாவட்ட அமைப்பு செயலாளர் பாலமூர்த்தி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் பாலசுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கரன், துரைராஜ், கேளூர் வேலன், முன்னாள் நகர நிர்வாகிகள் லெனின், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சாசா வெங்கடேசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் பேட்டை முருகன், தங்கப்பன், போலோ தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், புதிய நீதி கட்சி ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.