திருவண்ணாமலை நகரில் வரும் 23
மற்றும் 24 தேதிகளில் சித்ரா பௌர்ணமி விழா நடைபெறவுள்ளது. பெளர்ணமி கிரிவலம் ஒவ்வொரு
வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த வருடமும் சித்ரா பௌர்ணமி நாளை அதிகாலை
4.16 தொடங்கி நாளை மறுநாள் அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகின்றது.
இந்த வருடமும் பல்வேறு நாடுகளிருந்தும்,
மாநிலங்கிளிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் சுமார் 25 இலட்சம் பொது மக்கள் மற்றும்
பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. சித்ரா பெளர்ணமி நாளில்
வருகைத்தரும் பக்தர்களின் வசதிக்காக நகரினை இணைக்கும் 9 முக்கிய சாலைகளில் 11 தற்காலிக
பேருந்து நிலையங்கள் (சுமார் 2500 பேருந்துகள் நிறுத்தலாம்) மற்றும் நகராட்சி மூலம்
22 இடங்களிலும், ஊராட்சி பகுதிகளில் 33 இடங்களிலும் ஆக
மொத்தம் 55 இடங்களில் கார்கள்
நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து தற்காலிக பேருத்து, கார்
நிறுத்தங்களிலும் குடிநீர் வசதி. கழிப்பறைகள், மின் விளக்குகள், காவல் மையம் உள்ளிட்ட
வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சித்ரா பெளணர்மியை முன்னிட்டு 2500 சிறப்பு பேருந்துகள்
5346 நடைகள் இயக்கப்படவுள்ளது. தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் கிரிவலப்பாதை குறைந்த
கட்டணம் ரூ 10 இல் தனியார் பேருந்து 20 மற்றும் 81 பள்ளிப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சித்ரா பௌர்ணமி விழாவிற்காக 18 வழக்கமான நடைகள், 6
சிறப்பு இரயில்கள் இயக்கவும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. ஆட்டோ கட்டணம் தொடர்பாக 15 இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டள்ளது.
பெளர்ணமியின் போது கூட்ட நெரிசலை தனிப்பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு
கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
பொது மக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் வளாகத்திற்குள் 3 மருத்துவ
குழுக்கள் (இதயமருத்துவருடன்), 85 நிலையான மருத்துவ குழுக்களும், 20 எண்ணிக்கையில்
108 அவசர ஊர்தி வாகனங்களும் 15 மொபைல் அவசர ஊர்தியும் நிறுத்தப்படும். மேலும் பாதுகாப்பு
பணிக்காக 5000 காவலர்களும், 15 தீயணைப்பு வாகனங்களும், 184
தீயணைப்பு வீரர்களும், பதட்டமான
இடங்களாக கருதப்படும் 7 இடங்களில் 50 வனத்துறை வீரர்களும் நிறுத்தப்படுவார்கள்.
மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்
திருக்கோயில் வளாகத்திற்குள் 140 கண்காணிப்பு கேமிராக்களும், கிரிவலப்பாதையை சுற்றிலும்
97 கண்காணிப்பு கேமிராக்களும், 24 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்.
திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு
மோர், குடிதண்ணிர், தற்காலிக பேருந்து நிலையங்கள், கிரிவலப்பாதைகளில் சட்டம் ஒழுங்கு,
கண்காணிப்பு பணிகளில் 25 நிர்வாக நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவார்கள், மாவட்ட ஆட்சியர்
அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், தீயணைப்பு மற்றும் வட்டார போக்குவரத்து துறை ஆகிய
4 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும். திருக்கோயில் வளாகம், கிரிவலப்பாதை,
தற்காலிக பேருந்து நிலையம். இணைப்பு சாலை, தற்காலிக கார் நிறுத்துமிடங்களில் தூய்மை
பணி மேற்கொள்ளப்படவுள்ளது, நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் தற்காலிக பேருந்து
நிலையங்கள், கிரிவலப்பாதைகளில் குடிநீர் வசதிகளும், 106 இடங்களில் தற்காலிக கழிப்பறை
வசதிகளும் 425 இடங்களில் நிரந்தர கழிப்பறை வசதிகளும் நகராட்சி மூலம் 600 தூய்மைப்பணியாளர்களும்
ஊரக வளர்ச்சி துறை மூலம் 1200 பணியாளர்களம் பணியமர்த்தப்படவுள்ளனர்.
கிரிவலப்பாதையில் போதிய அளவில்
குப்பைத் தொட்டிகளும் உயர் மின் கோபுர விளக்குகளும், தெரு விளக்குகளும், 8 ஜெனரேட்டர்களும்
பக்தர்களின் வசதிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தங்கும் இடங்கள்
நகராட்சியில் 46 இடமும், ஊராட்சியில் 100 இடங்களிலும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலையான
மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும் இடங்களில் கொட்டகை, இருக்கைகள், குடிநீர் போன்று
வசதிகள் செய்தல், வழிகாட்டி பலகைகள் அமைத்தல், காவல் துறை தெரிவிக்கும் இடங்களில் கண்காணிப்பு
கோபுரங்கள் அமைத்தல், கிரிவலப்பாதையில் தூய்மை பணி மற்றும் கழிப்பிடங்களுக்கு தேவையான
பொருட்களை போதுமான அளவிற்கு முன்னதாகவே இருப்பு
வைத்தல், மாடவீதி மற்றும் கிரிவலப்பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கட்டுபாட்டு
அறைகள் ஏற்படுத்துதல், தற்காலிக பேருந்து நிலையம், திருக்கோயில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில்
கண்காணிப்பு பணியாளர்களை
நியமனம் செய்தல், இணைய வழியில்
அனுமதி பெற்ற 105 இடங்களில் மட்டும் (மண்டபங்கள் 82, பொது இடங்கள் 23) அன்னதானம் செய்ய
அனுமதிக்கப்படுவர். ஒரு மாவட்ட உணவு பாதுகாப்ப அலுவலர் 12 கண்காணிப்பு குழுக்கள்,
22 அலுவலர்களை அமைத்து 160 பிரத்யோக உடையுடன் தன்னார்வலர்கள் அன்னதானம் வழங்கம் இடங்களில்
பங்கேற்பார்கள். திருக்கோயில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில்
போதிய மின்வாரிய பணியாளர்களை பணி
ஒதுக்கீடு செய்து பணியில்
அமர்த்தப்படுவர். 8 இடங்களில்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைக்கப்பட்டுள்ளது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நகரில்
மற்றும் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய்
அலுவலர் மு.ப்ாியாதர்ஷினி, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி)
ரிஷப் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.