திருவண்ணாமலையில் குறும்படம் பாராட்டு விழா

Published: 22/04/2024 14:41 PM Updated: 22/04/2024 14:51 PM
Ads
news-banner

திருவண்ணாமலை செட்டித் தெருவில் உள்ள உண்ணாமலை  திருமண மண்டபத்தில் தி.மலை மாவட்ட திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் குறும்படம் பாராட்டு விழா நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் தி.பாரதி தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட செயலாளர் நன்னாரி வினோத் முன்னிலை வகிக்க, மாவட்ட பொருளாளர் எஸ்.சிவதாமோதரன் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவையொட்டி குறும்பட தேர்வுக்குழுவின் நடுவர்களாக நாட்டுப்புற தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர்
 ஜெ,சிவக்குமார் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் வாசுதேவன், கௌரவ தலைவர் ஆப்பிள்ராஜா, திரைப்பட இயக்குநர்கள் கோவி.செல்வராஜ், கே.ராமச்சந்திரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த விழாவில் 30க்கும் மேற்பட்ட குறும்படங்கள் தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். இதில் காதல் குறும்படம், தொப்புள்கொடி, முகவரி இல்லாத கடிதம் 3 குறும்படங்கள் முதல் 3 பரிசுகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில் 3 குறும்படங்களும் வெளியிடப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தி.மலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தாழம் ஒடை திரைப்பட தயாரிப்பாளர் ம.ராஜா கௌரவ தலைவர் வி.ஆனந்தன் ஆகியோர் பங்கேற்ற முதல் 3 இடங்களை பிடித்த குறும்படங்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2ம் பரிசு ரூ.5 ஆயிரம் 3ம் பரிசு ரூ.3 ஆயிரம் விருது மற்றும் ரொக்கப்பணம் மற்றும் நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை துணை ஒருங்கிணைப்பாளர் இ.ராஜேஷ் துணை செயலாளர் எஸ்.கருணாகரன், திரைப்பட நடிகர்கள் வி.ரஜினி, ஜி.மருது, செல்லங்குப்பம் விஜயன், ப.புண்ணியகோட்டி கௌரவ தலைவி கௌரி அம்மாள், நடிகைகள் இந்திராகார்த்திகேயன்,  ஆர்.தேஜ், மகளரணி தலைவி அஸ்வினி ஆகியோர் செய்திருந்தனர். இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து குறும்பட தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் நடிகர் நடிகைள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் எம்.ஏழுமலை நன்றி கூறினார்.