நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோவிலில் மாதம்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14
கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம்.
வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த
வசதியாக அண்ணாமலையார் கோவில், அஷ்டலிங்கம், திருநேர்அண்ணாமலையார் கோவில் உள்ளிட்ட
50-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக ஊழியர்களால் உண்டியல் அமைக்கப்பட்டுபக்தர்கள்
காணிக்கை செலுத்தினர்.
அதன்படி சித்ரா பௌர்ணமி தினத்தன்று
பக்தர்களால் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில்
உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களால் காணிக்கை எண்ணும்
பணி நேற்று காலை கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் தொடங்கியது.
நேற்று எண்ணப்பட்டதில் 2 கோடியே
23 லட்சத்து 71 ஆயிரத்து 962 ரொக்கமும், 365 கிராம் தங்கமும், 2 கிலோ 838 கிராம் வெள்ளியும்
பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.