தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழி பைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை

Published: 01/05/2024 11:04 AM Updated: 01/05/2024 11:04 AM
Ads
news-banner

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அதிக அளவில் நெகிழி பைகளை  பயன்படுத்துவதாக வந்த தகவலின் பெயரில் சோதனை செய்தபோது, தனியார் மண்டபத்தில் மூட்டை மூட்டையாக   சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  நெகிழி  பைகளை மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் பிரேம்குமார், தேர்வுநிலை பேரூராட்சி ஆய்வாளர் சொக்கநாதன் சின்னப்பன் மற்றும் பணியாளர்கள் அதிரடியாக பறிமுதல் செய்து வணிக உரிமையாளருக்கு  அபராதம் விதித்தனர்.

 

மேலும் புதிய பேருந்து நிலையம், போளூர் சாலை, பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி, உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலை மற்றும் வீதிகளில் உள்ள வணிகங்களில்  அதிரடியாக ஆய்வு செய்து சிறிய வணிக உரிமையாளருக்கு 500 மற்றும் மொத்த விற்பனை உரிமையாளருக்கு 1000 என அபராதம் விதித்து நெகிழி பைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.