இந்திய பாராளுமன்றத் தேர்தல்
2024-ஐ முன்னிட்டு, திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட
12 சட்டமன்ற பிரிவுகளில் தேர்தல் பணியாற்றிய அரசுப் பணியாளர்கள் செலுத்திய அஞ்சல் வாக்குகளை
சம்பந்தப்பட்ட பாராளுமன்றத் தொகுதி வாரியாக பிரித்து திருச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள
சிறப்பு மையத்திற்கு அனுப்பும் பணி அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்
மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஆரணி பாராளுமன்ற
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, மாவட்ட
ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள்
மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.