களம்பூர் பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை டாக்டர் எ.வ.வே.கம்பன் திறந்து வைத்தார்

Published: 05/05/2024 11:06 AM Updated: 05/05/2024 11:06 AM
Ads
news-banner

தமிழகத்தில் கோடை வெயிலில் சுட்டெரித்து வரும் நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர்மோர் பந்தல் அமைத்திட திமுக நிர்வாகிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார். அதன் பேரில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் பேரூர் திமுக சார்பில் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தலை மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இளநீர், பனநுங்கு, தர்பூசணி, பழச்சாறு, மோர் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை பொது மக்களுக்கும் பார்த்தசாரிகளுக்கும் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கும் பேருந்துகளில் பயணிக்கும் பயனாளிகளுக்கும் வழங்கினார்.

 

அப்போது பேரூராட்சி மன்றத் தலைவர் கே.டி.ஆர்.பழனி, முன்னாள் எம்எல்ஏக்கள் எதிரொலிமணியன், பாண்டுரங்கன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.வி.ராஜ்குமார் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் அகமத் பாஷா, இளைஞர் அணி அமைப்பாளர் நரேஷ் குமார், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பாபு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலக் குழு மாவட்ட அமைப்பாளர் சாது ஆனந்த், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர பேரூர் கழக நிர்வாகிகள், இளைஞர் அணியினர், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.