செய்யாறு பகுதியில் 2 வெவ்வேறு
இடங்களில் திமுக சார்பில் தளபதி தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்,
செய்யாறு கிழக்கு ஒன்றியம் செய்யாறு டவுன் பைபாஸ் சாலை சந்திப்பு அரசு கலை கல்லூரி
அருகில் பொதுமக்களுக்கான தளபதி தண்ணீர் பந்தல், வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம்
மாங்கால் கூட்ரோடு பஸ் நிறுத்தம் அருகில் தளபதி தண்ணீர் பந்தல் என வெவ்வேறு
இடங்களில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக வருகை தந்த
திமுக மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வவே.கம்பன் தண்ணீர் பந்தல்களை
திறந்து வைத்து, இளநீர், நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு, தர்ப்பூசணி, மோர்,
குளிர்பானங்கள் உள்ளிட்ட வற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ஒ.ஜோதி
தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை
வகித்தார். செய்யாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.ஞானவேல், வெம்பாக்கம் கிழக்கு
ஒன்றிய செயலாளர் என்.சங்கர் ஆகியோர் வரவேற்றனர்.
தலைமை செயற்குழு உறுப்பினர்
வேல்முருகன், மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், தொழிலாளர் அணி அமைப்பாளர் சம்பத்,
ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், தினகரன், திராவிட முருகன், தொண்டரணி அமைப்பாளர்
ராம் ரவி, முன்னாள் ஒன்றிய தலைவர் ரவி, விவசாய உற்பத்தி குழு உறுப்பினர் சிவக்குமார்,
தெய்வமணி, முருகேசன், பாபு, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள்,
ஒன்றிய குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.