அரக்கோணம் ஐசக் கலை மற்றும்
அறிவியல் கல்லூரியில் விஷ்வல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட 10 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது
என்று கல்லூரி நிறுவனர் ஐசக் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்
அடுத்த ஆட்டுப்பாக்கம் மஞ்சம்பாடி கிராமத்தில் டாக்டர் வி்.எஸ்.ஐசக் கலை மற்றும்
அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் வரும் கல்வி ஆண்டில் புதிய பாடப் பிரிவுகள்
தொடங்கப்படுகிறது. இது குறித்து டாக்டர்
வி.எஸ்.ஐசக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவனர் ஐசக் நிருபர்களுக்கு அளித்த
பேட்டியில் கூறியதாவது,
தமிழக அரசு அங்கீகாரம் பெற்று
கடந்த கல்வி ஆண்டு முதல் டாக்டர் வி.எஸ்.ஐசக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி
வருகிறது.
முதல் பருவத் தேர்வில் 90 சதவீத
மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இரண்டாம் பருவ தேர்வுகள் நடந்து வருகிறது. வரும் கல்வியாண்டு ஆன ஜூன் முதல் மே மாதத்திற்கான மாணவர் சேர்க்கை மே 6ம்
தேதி முதல் நடைபெறுகிறது.
இந்த கல்லூரியில் பி ஏ தமிழ், பி ஏ ஆங்கிலம், பிஏ கெமிஸ்ட்ரி, பி ஏ வரலாறு, பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன், பி எஸ் சி கணிதம் மற்றும் பிகாம் ஜெனரல், பிகாம் செகரட்ரிஷிப், பிசிஏ, பிஎஸ்சி கெமிஸ்ட்ரி, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் என
மொத்தம் 10 பாடப்பிரிவுகளுடன் இயங்க உள்ளது.
குறிப்பாக மாணவ, மாணவிகளின்
வேலைவாய்ப்பு நலன் கருதியும், அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக
விஷுவல் கம்யூனிகேஷன் பாடப்பிரிவு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விஷுவல் கம்யூனிகேஷன் சுற்றுவட்டாரத்தில்
எங்கும் இல்லை.
அரக்கோணம், ராணிப்பேட்டை, நெமிலி,
திருவலாங்காடு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த
மாணவர்களுக்கு விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை
பயன்படுத்திக் கொள்ளலாம். கல்லூரியில் சிறப்பான நூலகம்
மற்றும் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 5 லட்சத்துக்கும் மேலான உபகரணங்கள், போட்டோஷாப், கம்ப்யூட்டர் லேப் அமைக்கப்படுகிறது. மாணவர்கள் உயர்கல்வி பெற்று வாழ்க்கை தரத்தில்
பெரும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே இக்கல்லூரியின் நோக்கம் என்றார்.