தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 5 சவரன் தாலி சங்கிலி பறித்த மர்ம நபர்

Published: 05/05/2024 11:10 AM Updated: 05/05/2024 11:10 AM
Ads
news-banner

திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி கிராமத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து 5 வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமின்றி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து ஐந்து சவரன் தாலி சங்கிலி மற்றும் 16 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. 

திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் விவசாயத்தை செய்து வருகின்றனர், இந்நிலையில் நேற்று அதிகாலை ஊசாம்பாடி கிராமத்தை சேர்ந்த சம்பத், ராணி, வெங்கடாசலம், ஐயப்பன், வெங்கடேசன் ஆகியோரின் 5 வீடுகள் அடுத்தடுத்து கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்று உள்ளது. 

இதில் சம்பத் என்ற நபர் இரவு தனது விவசாய நிலத்திற்கு சென்றதால் வீட்டில் அவரது மனைவியும் குழந்தைகளும் மட்டுமே இருந்துள்ளனர், இதனை அறிந்த மர்ம நபர் பூட்டை உடைத்து உள்ளே சென்று உறங்கிக் கொண்டிருந்த தேன்மொழி என்பவரின் கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தாலிசங்கிலியை அறுத்து எடுத்துச் சென்றுள்ளார், இதேபோன்று ராணி என்பவர் வீட்டில் இருந்து 16 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து ஊசாம்பாடி கிராம மக்கள் திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர், தகவலின் பெயரில் கிராமிய காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.