அட்சய திருதி நாளான நேற்று திருவண்ணாமலை
தேரடி வீதி, திருவூடல் தெருக்களில் உள்ள நகை கடைகளில் நகை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக
கடைக்கு சென்றனர்.
அட்சய திருதி அன்று தங்க நகை எடுத்தால்
வீட்டில் தங்கம் சேரும் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. தங்கத்தின்
விலை ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அட்சய திருதி என்று சாமானியர்கள் முதல் பணக்காரர்
வரை ஒரு மில்லிகிராம் அளவாவது தங்கம் வாங்கி வைக்க வேண்டும் என்பது அனைவரின் நம்பிக்கையாக
உள்ளது.
நேற்று அட்சய திருதி என்பதால்
திருவண்ணாமலை தேரடி வீதி, திருவூடல் தெரு பகுதியில் உள்ள அனைத்து நகை கடைகளிலும் ஆர்வத்தோடு
நகை வாங்குபவர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கூலி வேலை செய்பவர்கள் கூட இந்த
தினத்தில் தங்களால் முடிந்த பணத்தை சேர்த்து வைத்து அரை கிராம் தங்கத்தை வாங்கி செல்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் விலையில்
ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் மறக்காமல் அட்சய திருதியை தினத்தில் தங்கத்தை வாங்கி சேர்த்து
வைக்கின்றனர்.
நகை வாங்கவே முடியாதவர்கள் வீட்டில்
உப்பு மஞ்சத்தூளை வாங்கி வைத்து கடவுளின் படத்தின் முன்பாக வைத்து வணங்குகின்றனர்.
இந்த ஆண்டு அட்சய திருதியில் ஏராளமான
புதுவகை மாடல்கள் வந்திருப்பதாகவும் அவற்றை தங்களுடைய வசதிக்கு தகுந்தார் போல் வாங்கியதாகவும்
பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு சில கடைகள் ராசியான கடைகள்
என்றும் அந்தக் கடைகளில் வாங்கும் போது தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கிறது என்றும்
ஒரு சிலர் கூறினர் மேலும் ஒரு சில கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கத்தை
வாங்கி சென்றனர்.
ஒரு சில கடைகளில் கை குழந்தையோடு
வந்து தங்களது குழந்தைகளுக்கு தங்கத்தை வாங்கி சென்றனர்.