தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

Published: 11/05/2024 13:51 PM Updated: 11/05/2024 13:51 PM
Ads
news-banner

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களாக பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், சரியான எடையில் அத்தியாவசிய பொருள்களை இறக்காமல் அபராதம் விதிக்கும் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும், அத்தியாவசிய பொருள்களை ஏற்றி வரும் லாரிகளில் எடை தராசு மற்றும் நடமாட்ட பணியாளர் வரவேண்டும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள்களை இறக்குவதற்கு கட்டாய இறக்கு கூலி வசூலிப்பதை தடுக்க வேண்டும், விளிம்புத் தொகையை ரூபாய் 107 ரூபாயாக உயர்த்திய பின்பும் கட்டாய வசூல் செய்வது தடுக்கப்பட வேண்டும், மாநகராட்சி, நகராட்சிக்கு ஒரு குவிண்டாலுக்கு கூலித்தொகை இவ்வளவு என்று பதிவாளர் நிர்ணயம் செய்ய வேண்டும், இருப்பு அதிகமாக இருத்தல் அபராதம் விதிப்பதை கைவிட்டு பழைய நடை முறையின்படி இருப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில செயலாளர் ஏ.சி.சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட ெசயலாளர் இரா.சண்முகம், மாவட்ட பொருளாளர் சி.ஜெய்சங்கர் உள்ளிட்ட  நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.