தி.மு.கவின் தேர்தல் அறிக்கை இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் செஞ்சி.மஸ்தான் பேச்சு

Published: 25/03/2024 09:45 AM Updated: 28/03/2024 11:49 AM
Ads
news-banner

தி.மு.கவின் தேர்தல் அறிக்கை இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் செஞ்சி.மஸ்தான் பேச்சினார்.


விழுப்புரம் வடக்கு மாவட்டம் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி சார்பில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட திண்டிவனம் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் மரக்காணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

 

திண்டிவனம் தொகுதி பொறுப்பாளர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் கலந்து கொண்டு விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை ரவிக்குமாரை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.

 

கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-

 

பாசிச மோடி ஆட்சியை அகற்ற வேண்டும், ஜனநாயக ஆட்சி மக்களாட்சி ஒன்றியத்தில் கொண்டுவர வேண்டும். என்பது தான் இந்திய கூட்டணியின் நோக்கம் தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவில் முழுவதும் வரவேற்கிறார்கள்.

 

அந்த வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியாக உள்ளதால் இந்தியாவில் உள்ள மக்கள் நம்பி இந்தியா கூட்டணிக்கு வலுவான ஆதரவை அளித்து வருகின்றனர்.

 

தமிழ்நாட்டின் தேர்தல் அறிக்கை இந்தியாவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பி.ஜே.பி சார்பில் அறிவிக்கின்ற வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து பின்வாங்கப்படுவதாக மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் செஞ்சி.மஸ்தான் தெரிவித்தார்.

 

கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமமூர்த்தி, சீத்தாபதி சொக்கலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு, மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சேகர், பொருளாளர் ரமணன், துணைச் செயலாளர் ரவிக்குமார், மரக்காணம் ஒன்றிய பெருந்தலைவர் தயாளன், துணை சேர்மன் பழனி, மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், திண்டிவனம் நகர துணை செயலாளர் கௌதமன்,உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.