ஆரணியில் நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published: 23/05/2024 11:41 AM Updated: 23/05/2024 11:41 AM
Ads
news-banner

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வேலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட சிவசக்தி நகர் பகுதி வந்தவாசி சாலையில் உள்ள சாமந்தவாடி ஏரியில் ஆரணி டவுன் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி எரியூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும் சாமந்தவாடி ஏரிப்பகுதியில் ஆரணி நகரில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் ஏரிப்பகுதி அசுத்தம் அடைந்தும் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

மேலும் இப்பகுதியில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் இருந்தும் குப்பை கழிகள் துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகளை நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்று பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.

 

மேலும் இது சம்மந்தமாக பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காததால் திடிரென்று சிவசக்தி நகர் பகுதி மக்கள் வந்தவாசி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

பின்னர் தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் பொது மக்களிடம் பேசி சமரசம் செய்து பின்பு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

 

அப்போது பேருந்து பயனி ஒருவர் அலுவலகம் செல்ல வழிவிட கோரி பொது மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை கண்டும் காணாமல் போலீசார் பொது மக்களை சாலை மறியலையிலிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

 

மேலும் உதவி காவல் ஆய்வாளர்கள் சுந்தரேசன், அருண் மற்றும் நகராட்சி அலுவலர் மோகன சுந்தரம் ஆகியோர் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

 

இந்த சாலை மறியல் போராட்டத்தால் 1 மணிநேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் அலுவலக ஊழியர்கள் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.