போளூர் பேருந்து நிலையம்
அமைந்துள்ள கடலூர்-சித்தூர் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால்
சாலை சந்திப்பு மேம்பாட்டு தொடர்பாக விழுப்புரம் சாலை பாதுகாப்பு நெடுஞ்சாலைத்துறை
கோட்டப்பொறியாளர் ஸ்ரீகாந்த், ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர்
பேருந்து நிலையம் அமைந்துள்ள கடலூர்-சித்தூர் சாலை சந்திப்பில் விழுப்புரம் சாலை
பாதுகாப்பு நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ஸ்ரீகாந்த், ஆய்வு செய்தபோது, போளூர்
பேருந்து நிலையம் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் – சித்தூர் சாலை
சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதால் சாலை பாதுகாப்பினை
உறுதிப்படுத்தல் சாலையை விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு, விரிவான சாலை
உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை சந்திப்பை மேம்படுத்த சாலை
பாதுகாப்பு கோட்டப்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை விழுப்புரம் ஸ்ரீகாந்த், நேரில்
ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது உடன் சாலை
பாதுகாப்பு உதவிக்கோட்டப்பொறியாளர் இராஜேந்திரன், போளூர் நெடுஞ்சாலைத்துறை,
உதவிக்கோட்ட பொறியாளர் பா.திருநாவுக்கரசு, சாலை பாதுகாப்பு உதவிப்பொறியாளர்
தர்மராஜ் போளூர் நெடுஞ்சாலைத்துறை, உதவிப்பொறியாளர் வேதவள்ளி, மற்றும்
நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.