காஞ்சிபுரத்தில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் விழா

Published: 16/09/2024 15:47 PM Updated: 16/09/2024 15:48 PM
Ads
news-banner


கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் தேனம்பாக்கம் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ பாடலீஸ்வரர் ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

சிவ வாத்தியங்கள் முழங்க, அதிர் வேட்டுகள் வெடிக்க, விண்ணை பிளக்கும் "ஓம் நமச்சிவாய","ஓம் நமச்சிவாய" என்ற  பக்தர்களின் பக்தி பரவச கோஷங்களுடன் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் லியோ என்.சுந்தரம், லலிதா சுந்தரம் மற்றும் எம்.எல்.மாணிக்கவேலு, பத்மாவதி மாணிக்கவேலு ஆகியோரது ஏற்பாட்டில் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதையொட்டி ஆலய வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு,  கடந்த 2 தினங்களாக விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,கோ பூஜை, தன பூஜை, விசேஷ திவ்ய ஹோமம், யாக சாலைகள் பூஜை நடந்தேறியது.

இதனைத்தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் கால யாகசாலை பூஜை முடுவுற்று, மங்கள வாத்தியங்களுடன், யாக சாலையிலிருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் சிவாச்சாரியார்களால் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிவ வாத்தியங்கள் முழங்க, அதிர் வேட்டுகள் வெடிக்க, விண்ணை பிளக்கும் "ஓம் நமச்சிவாய","ஓம் நமச்சிவாய" என்ற  பக்தர்களின் பக்தி பரவச கோஷங்களுடன் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடந்தேறி, கூடியிருந்த பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில், திமுக காஞ்சி தெற்கு மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், திமுக காஞ்சி தெற்கு மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாமன்ற உறுப்பினர்கள் தேனம்பாக்கம் சங்கர், கமலக்கண்ணன் உள்ளிட்ட சுற்றுப்புறத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து ஸ்ரீ பாடலீஸ்வரரை வேண்டி விரும்பி வழிபட்டுச் சென்றனர்.

மேலும் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கு அன்னதானங்களும், அருட் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.