திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஊரக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம்/மகளின் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் மரு.எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, ஆகியோர்
உடனிருந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காக தனியார் நிறுவனங்களுடன் கலந்துரையாடி, வேலைவாய்ப்பு முகாம்களை அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட அறிவுறுத்தினார்கள். அதன்படி மாநிலம் முழுவதும் 138 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்களும், 1506 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு, கலைஞர் நூற்றாண்டு சிறப்பு நிகழ்வாக 32,361 மாற்றுத்திறனாளிகளுக்கும் 2
இலட்சம் இளைஞர்களுக்கும் தனியார் நிறுவனங்கள் மூலமாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் 1,11,22,022 அன்று நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 21,647 நபர்கள் கலந்துகொண்டு, 2,540 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தனியார் நிறுவனங்கள் மூலமாக வழங்கப்பட்டது. மேலும் 2,70,82,023 அன்று அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 23 தனியார்துறை நிறுவனங்களும் 1,652 வேலைநாடுநர்களும் கலந்து கொண்டதில் 253 இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக 17.02.2024 அன்று கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி வளாகத்தில் நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 629 பங்கு பெற்று 230 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கப்பட்டது. இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 44 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது,
550க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 8607 நபர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சரண்யாதேவி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செல்வி யோகலட்சுமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.