காலாண்டு விடுமுறை தினத்ைதயொட்டி அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

Published: 29/09/2024 14:03 PM Updated: 29/09/2024 14:03 PM
Ads
news-banner

காலாண்டு விடுமுறை தினத்ைதயொட்டி அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். உள்ளூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகையால் கூட்டம் அலைமோதியது.


உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அண்ணாமலையார் திருக்கோயிலில் காலாண்டு விடுமுறை மற்றும்  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


அண்ணாமலையார் கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஆகம விதிப்படி கோவில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.


அதனை தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்கின்றனர்.

அண்ணாமலையார் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.


வழக்கமாக  அண்ணாமலையார் திருக்கோவிலில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு மட்டுமில்லாமல் விடுமுறை தினங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து வரும் நிலையில் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட மாநில பக்தர்களும்  அண்ணாமலையார் கோவிலுக்கு அதிக அளவு வருகை புரிந்ததால் கூட்டம் அதிகரித்துள்ளது.


குறிப்பாக காலாண்டு விடுமுறை முடிந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று முன்தினம் இரவு முதலே கிரிவலம் வந்த பக்தர்கள் அதிகாலையிலிருந்து நீண்ட வரிசையில்  காத்திருந்த பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு பிறகு அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.


நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு திருக்கோவில் சார்பாக திருக்கோவிலில்பல்வேறு இடங்களில் குடிநீர் வழங்கப்படும் வருகின்றது.