சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் வரை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில், உதயநிதிஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டதற்காக கழக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமையில் ஊர்வலமாக சென்று பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் பெ.க.தி.சரவணன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேருந்துகளில் பயணம் செய்தோர், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்களுக்கு கழக முன்னோடிகள் இனிப்புகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் த.ரமணன், மெய்யூர்.சந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி.எம்.நேரு. காலேஜ் கு.ரவி, ஏ.ஏ.ஆறுமுகம், உதயநிதிகணேஷ், ஏ.டபள்யூ. சர்தார்காசிம், பி.கே.ஏ.அருண், பொதுக்குழு உறுப்பினர் கா.சு.இளங்கோவன், டி.கென்னடி, மாநகர துணை மேயர் சு.ராஜாங்கம், நகர நிர்வாகிகள் குட்டி சு.புகழேந்தி, இல.குணசேகரன், ஹக்கிம்சேட், மாவட்ட துணை அமைப்பாளர்கள் எஸ்.கண்ணதாசன், கிரிக்கெட் கே.ரவி, தினேஷ்பாபு, லக்கி அரவிந்த், ஏ.எம்.பாஷா, டி.எம்.வெங்கடேசன், டி.பென்ராபர்ட் அறங்காவலர் குழு உறுப்பினர் எம்.வெங்கடேசன், சையத் ஜகுருதீன், கஸ்தூரி, ஏந்தல் நடராஜன், மலைவாசன், மின்னல்பாபு, எஸ்.வி.ஆர்.மணி, பா.முர்பத், வட்ட செயலாளர்கள் அகோவிந்தன், டி.என்.மனோகரன், எஸ்.கே.டி.வீரா, டி.எல்.எம்.வினோத்குமார், எழில்மாறன், வி.எஸ்யரவிந்திரன், சென்னை.சுரேஷ், பி.ஜி.முருகன், டி.எம்.ஞானம், அ.சபரி, வ.சம்மந்தம், ஜி.சுரேஷ்குமார், ஆ.முருகன், தீபன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.