திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட
திருவண்ணாமலை மாநகரம், திருவண்ணாமலை ஒன்றியங்களில் திமுக இளைஞர் அணி மற்றும் ஸ்டாலின்
மகளிர் படையினர், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை ஆதரித்து கிராமம், கிராமமாக,
வீடு, வீடாக வாக்குசேகரித்தனர்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின்,
திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலுவை
ஆதரித்து, திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலை மாநகராட்சி பகுதிகளிலும்,
திருவண்ணாமலை ஒன்றியத்தில் 32 ஊராட்சி, தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளிலும்
திமுக இளைஞரணியினரும், ஸ்டாலின் மகளிர் படையினரும் கிராமம், கிராமமாகவும், வீடு, வீடாகவும்
வாக்கு சேகரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாநகராட்சி பகுதிகளில்
12.04.2026 முதல் திமுக இளைஞர் அணியினர், ஒவ்வொரு பூத்திற்கும் 15 இளைஞர் அணியினர்
வீதம், மாவட்ட துணை அமைப்பாளர் சு.ராஜாங்கம் தலைமையில் தினசரி காலை 7 மணி முதல் 10
மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 9 வரை வாக்குசேகரித்து வருகின்றனர். 17.04.2026 தேதி
முதல் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு ஆகிய ஒன்றியங்களில் வாக்குசேகரித்து வருகின்றனர்.
அதேபோல், திருவண்ணாமலை மாநகராட்சி
பகுதிகளில் 12.04.2026 முதல் ஸ்டாலின் மகளிர் படையினர் ஒவ்வொரு பூத்திற்கும் 15 மகளிர்
வீதம், மாவட்ட அமைப்பாளர் கற்பகம் சரவணன் தலைமையில் தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும்
வீதி, வீதியாக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு வாக்குசேகரித்து வருகின்றனர்.