திருவண்ணாமலையில் புகழ்பெற்ற
கல்வி நிறுவனமான அருணை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), இதன் சிகர
நிகழ்ச்சியான ஆண்டு விழா மற்றும் ‘AECOFEST-26' கலைத்
திருவிழா கல்லூரி வளாகத்தில் மிகப்பிரம்மாண்டமாக
நடைபெற்றது.
இந்த விழாவிற்குத் தாளாளர்
வி.சங்கரி தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். கல்லூரியின் துணைத் தலைவர் எ.வ.குமரன்,முனைவர்
பதிவாளர் ஆர்.சத்தியசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் முதல்வர் சி.இளஞ்செழியன் வரவேற்புரை
ஆற்றி, கல்லூரியின் சாதனைகளை உள்ளடக்கிய ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார்.
இந்நிகழ்ச்சின் தொடக்கமாக மதியம்
2 மணியளவில் பிரபல பின்னணி பாடகர் செந்தில் தாஸ் மற்றும்
அவரது குழுவினர் வழங்கும் இசை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துள்ளலிசை மற்றும் மெல்லிசை பாடல்கள் மூலம்
மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
உடன் கல்லூரி
மாணவர்களும் சில
பாடல்களை குழுவினருடன்
இணைந்து பாடினார்கள்.
மாலை 5.30 மணியளவில் கல்லூரியின் திறந்தவெளி
அரங்கில் மாணவ, மாணவியரின் நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள்
"DANCE, MUSIC, GENZ In Action" என்ற கருப்பொருளில் நடைபெற்றது. இதில் கல்லூரி
மாணவர்கள் தங்களின்
தனி திறமைகளை
வெளிப்படுத்தி உற்சாகமாக
நடனமாடினர்.
இந்த விழாவிற்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகை
அபர்ணா தாஸ் சிறப்பு
விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர்
விழாவில் உரையாற்றியதுடன், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும்
மற்றும் கல்லூரியின் சிறந்த
ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
அதுமட்டுமின்றி இவர் மாணவர்களுடன்
சேர்ந்து ஒரு
சில பாடல்களுக்கு
நடமாடினர். இறுதியாக கல்லூரியின் உயிரியல் தொழில்நுட்ப துறைத்தலைவர் ஆசிரியர் பி.பிரவீன்குமார் நன்றியுரை
வழங்கினார்.