வியட்நாம் சுற்றுலா படகு விபத்தில்,
தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 நபர்கள் உயரிழந்தனர். அதில் திருவண்ணாமலைச் சேர்ந்த ரவிசங்கர்
என்கிற வியாபாரியும் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை முன்னாள் அமைச்சரும், கழக
கொறடாவுமான எ.வ.வேலு சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது மகனின் உயர்கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக
குடும்பத்தினரிடம் கூறினார்.
வியட்நாம் நாட்டின் புகுவோக் தீவு
அருகே ஜூலை 11 அன்று சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10பேர்
உட்பட 15 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திடீர் கடல் சீற்றம் மற்றும் இராட்ச
அலை காரணமாக இந்த நேரிட்டது. உயரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, ஜூலை-14 அன்று
தமிழகம் கொண்டுவரப்பட்டு அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை ஆனைக்கட்டி
தெருவில், வியட்நாம் சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்த வியாபாரி ரவிசங்கர் வீட்டிற்கு
முன்னாள் அமைச்சரும், கழக கொறடாவுமான எ.வ.வேலு சென்று அவர்கள் குடும்பத்தினரை சந்தித்து
ஆறுதல் கூறினார்.
இறந்த ரவிசங்கரின் மகன் ராமபிரகாஷ்
கல்வி குறித்து கேட்டறிந்தார். மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவனின் கல்லூரி செலவை முழுவதுமாக
ஏற்றுக் கொள்வதாக குடும்பத்தினரிடம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்
சி.என்.அண்ணாதுரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாநகர
செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன் தொ.மு.ச. க.சௌந்தரராசன்,
மாவட்ட அமைப்பாளர் காலேஜ் கு.ரவி, பகுதி செயலாளர் ந.சீனுவாசன், எஸ்.டி.ஆர்.எஸ்.பாபு,
மாவட்ட பிரதிநிதி இல.குணசேகரன், நகரமன்ற உறுப்பினர் அருணாரவி, மாவட்ட துணை அமைப்பாளர்
லக்கி.அரவிந்த், வட்ட செயலாளர் கோல்டு.மஞ்சு மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.