திமுக சார்பில் 4-வது வார்டில் மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்...

Published: 26/07/2026 07:18 AM Updated: 26/07/2026 07:18 AM
Ads
news-banner

திருவண்ணாமலை மாநகர திமுக சார்பில் 4-வது வார்டில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ ஏற்பாட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி பகுதி செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமையில், வட்ட செயலாளர் ரவீந்திரன் ஏற்பாட்டில் மாநகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் கலந்து கொண்டு நோட்டு புத்தகங்களை வழங்கினார். உடன் மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன், மாநகர துணை மேயர் ராஜாங்கம், மாநில தொமுச ஆறுமுகம், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் இல.குணசேகரன், பாலமுரளிகிருஷ்ணன், எஸ்.வி.ஆர்.மணிகண்டன், முருகன், சீனிவாசன், ராயல் தியாகு, பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்