திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மார்க்கெட் வீதியில் ஆரணியை சேர்ந்த அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரிபாபு என்பவர் பாரி ஸ்வீட்ஸ் என்ற கடையை நடத்தி வருகின்றார். மேலும் ஸ்வீட்ஸ் கடைக்கு பின்புறத்தில் உள்ள குடோனில் சிலிண்டர் மற்றும் கடைக்கு தேவையான மூலபொருட்கள் வைக்கபட்டுள்ளதாக கூறப்படுகின்றன. இன்று
மாலை நேரத்தில் குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் வைக்கபட்ட சுமார் 10சிலிண்டர்களில் 4சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அருகில் புதிய பேருந்து பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் தகவலறிந்த வந்த தீயணைப்பு துறை அலுவலர் கோபாலகிருணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 4 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனையொடுத்து இச்சம்பவம் ஆரணி பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் பொதுமக்கள் குவிய தொடங்கியுள்ளனர். பின்னர் டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் போலீசார் குவிக்கபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தொடர் தீ மூட்டத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை ஏற்பட்டன. தீ பரவாமல் இருக்க அருகில் உள்ள எண்ணை குடோனில் உள்ள பேரல்களை அப்புறம்
பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பேக்கரி முலப் பொருட்கள் எரிந்து சேதம்
ஆரணியில் பிரபல ஸ்வீட்ஸ் கடை குடோனில் எரிவாயு கசிவு காரணமாக 4 சிலிண்டர்கள் வெடித்து இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ உயிர் சேதமோ இல்லை தீவிபத்துகுள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது