வாக்காளர் விவரச்சீட்டை மாவட்ட ஆட்சியர் வழங்கி தொடங்கி வைத்தார்

Published: 02/04/2024 11:16 AM Updated: 02/04/2024 11:16 AM
Ads
news-banner

கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் வாக்காளர் விவரச்சீட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், வழங்கி தொடங்கி வைத்து வாக்களர் மையங்களை ஆய்வு செய்தார்.

 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு, காப்பலூர், கீழ்பாலூர், ஆகிய ஊராட்சிகளில் நேற்று வாக்காளர் விவரச்சீட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், வழங்கி தொடங்கி வைத்தார். வாக்காளர் மையங்களை ஆய்வு செய்து பேசிய அவர், வாக்காளர்கள் நீங்கள் உங்கள் வாக்குகளை சரியாக பதிவு செய்து ஜனநாயகத்தின் உரிமையை நாம் மீட்க வேண்டும் வாக்குரிமை நமது உரிமை எப்பொழுதும் நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது அதனால் கட்டாயம் அனைவரும் 100% சதவீதம் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் மேலும் 18 வயது பூர்த்தி அடைந்த முதல் தலைமுறை வாக்குகளை சரியாக பதிவு செய்து உங்கள் வாக்குரிமையை நிலைநாட்ட வேண்டும் தெரிவித்தார்

 

வாக்களிக்கும் மையங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்த அவர், காப்பலூர் ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சத்தாக வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், ஆசிரியர்களுக்கும் சத்துணவு அமைப்பாளர்களுக்கும் அட்வைஸ் கூறி வாக்களிக்கும் விவரச்சீட்டை வழங்கினார்.

 

ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, தாசில்தார் ராஜராஜேஸ்வரி, வட்ட வழங்க அலுவலர் ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர் போது, கிராம நிர்வாக அலுவலர்கள் வினோத், இனியன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.