திருவண்ணாமலை மாவட்டத்தை 3 மாவட்டங்களாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேச்சு

Published: 04/04/2024 10:55 AM Updated: 04/04/2024 10:55 AM
Ads
news-banner

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இதில் அவர் பேசியதாவது, உலகமே வியந்து பார்க்கக்கூடிய பிரதமராக ஆச்சரியமாக பார்க்கக்கூடிய பிரதமரை பெற்றுள்ளோம் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆவார்.

இந்த திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் வெற்றி பெறுவார் என்றும், கழகத்தில் 2 பெரிய மாவட்டங்கள் திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

32 மாவட்டங்களாக இருந்த தமிழ்நாட்டை 38 மாவட்டங்களாக பிரித்தது குரல் கொடுத்தது போராடியது பாமக எனவும் வேலூர் மாவட்டத்தை மட்டும் மூன்றாக பிரித்து உள்ளோம் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து உள்ளோம். தமிழகத்தில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக பாமக தான் காரணம் என்றும் அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்தை 3 மாவட்டங்களாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்தியில் பாஜக ஆட்சி ஆளப்போகிறது எனவும் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பிரதமர் மோடி என் பெயரில் மிகுந்த பாசம் உடையவர், சேலத்தில் நடந்த கூட்டத்தில் கட்டித்தழுவிக்கொண்டோம், நான் தொலைபேசியில் பேசினாலே பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார் மோடி என்றும், அஸ்வத்தமன் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

திமுக ஆட்சியில் டாஸ்மார்க் கடை தான் நடக்கிறது அந்த வருமானத்தில் தான் தமிழக அரசு நடத்துகிறார்கள் அந்த வகையில் மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் முதல்வர் கொண்டு வந்த திட்டங்கள் என்ன என கேள்வி எழுப்பிய அவர், தேர்தல் அறிக்கையில் 500 திட்டங்களை கூறினார்கள் ஐந்து திட்டங்களையாவது நிறைவேற்றி உள்ளார்களா என்று கேள்வி எழுப்பினார்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி மீது கோபமாக உள்ளார்கள். பழைய ஓய்வு திட்டத்தை கொண்டு வருவேன் என்று வாக்குறுதி கொண்டு இதுவரைக்கும் நிறைவேற்றவில்லை

 

10.5% இட ஒதுக்கீட்டுக்காக நான் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோட்டைக்குச் சென்று பேசினேன், 8 அமைச்சர்கள் 10 செயலாளர்கள் உள்ளிட்டவர்களிடம் அரை மணி நேரம் பேசினேன். 10.5 சதவீதம் இட ஒதுக்க வேண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 35 நிமிடம் வகுப்பு எடுத்தேன். தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களை விட்டால் நாதி இல்லை என்று முதல்வர் ஸ்டாலினிடம் கூறினேன் என்றும், ஆனால் உழைக்கும் மக்களுக்கு பாட்டாளி மக்களுக்கு எதுவுமே செய்யக்கூடாது என திமுக உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று என்ன செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பிய அவர், கடந்த ஐந்தாண்டுகள் நாடக மன்றத்தில் திமுக உறுப்பினர் என்ன செய்தார்கள் எனவும் திருவண்ணாமலை அஸ்வத்தாமன் பாராளுமன்றம் சென்றால் சொன்ன திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.