திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி
திமுக வேட்பாளர் சி என் அண்ணாதுரை, ஆரணி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எம்
எஸ் தரணி வேந்தனை ஆதரித்து திருவண்ணாமலை அடுத்த சோ.காட்டுக்குளம் கிராமத்தில்
பிரம்மாண்டமான தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு
வரவேற்புரை நிகழ்த்தினார்.
திருவண்ணாமலை மாவட்ட திமுக
சார்பில் அமைச்சர் எ.வவேலு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து
நினைவுப் பரிசு வழங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பேசியதாவது, தீப ஒளி தரும் திருவண்ணாமலைக்கு வந்துள்ளேன் என்றும் நூற்றாண்டு கண்ட
திருவண்ணாமலை நகராட்சி மாநகராட்சியாக உருவாக்கிய உங்கள் ஸ்டாலின் வந்துள்ளேன் என
கூறி உரையை தொடங்கினார்.
என்னையும் உங்களையும் எவ்வாறு
பிரிக்க முடியாதோ, அதே போன்று திருவண்ணாமலையையும், திமுகவையும் பிரிக்க முடியாது.
திமுகவிற்கு திருவண்ணாமலை என்றாலே வெற்றி தான் முதன்முதலாக திமுக 1957 தேர்தலில்
போட்டியிட்ட பொழுது 15 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். அந்த 15 நபர்களில்
நூற்றாண்டு கண்ட பாபு சண்முகம் உள்ளிட்ட ஆற்றல் மிகுந்த உறுப்பினர்களை தந்த மண்
இந்த மண் என்றார்.
அதேபோன்று நாடாளுமன்றத்தில் நாம்
முதன் முதலாக அடியெடுத்து வைத்த போதும் 2 எம்பிக்கள் அதில் ஒரு எம்பி இரா.தர்மலிங்கத்தை
தந்த மண் இந்த மண் என சுட்டிக்காட்டினார். இவர்களை மட்டுமின்றி பிஎஸ் சந்தானம், களம்பூர் அண்ணாமலை இப்படி பல வரலாற்று
செயல் வீரர்களை தந்து எதிலும் வல்லவராக விளங்கக்கூடிய எ.வ.வேலுவைுயம் தந்துள்ள
இந்த மண் என சுட்டிக்காட்டினார்.
திமுக வரலாற்றில் ஒவ்வொரு
கட்டத்திலும் இந்த பகுதி மக்கள் உற்றத் துணையாக இருந்துள்ளார்கள். திருவண்ணாமலைக்கான தொடர்பை நான் கூறுவது என்றால்
1965ல் மொழி போருக்கு வித்திட்ட 1967 ஆம் ஆண்டு இந்தி திணிப்பு மாநாடு நடந்த இடம்
திருவண்ணாமலை, 1967 தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக இருந்தது இந்த திருவண்ணாமலை.
1963 இடைத்தேர்தல் வெற்றி கிடைத்த இடமும் இந்த மண்தான் என தெரிவித்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு
வெற்றிக்கு வித்திட்ட உங்கள் தொகுதி ஸ்டாலின் பயணம் தொடங்கிய இடம் திருவண்ணாமலை
தான் என தெரிவித்தார். திமுகவும் திருவண்ணாமலையையும்
சேர்ந்தே இருக்கும் என தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி வெற்றிக்கு இந்த நாடாளுமன்ற துணையாக இருக்கப் போவதும் தெரிவித்தார். இந்த
தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் சி.என். அண்ணாதுரை போட்டியிடுகிறார் இவர் பெயரை
போதும் வெற்றிக்கு என குறிப்பிட்டார்
இவர் 1987 ஆம் ஆண்டு முதல் இளைஞர்
அணியில் கட்சிப் பணி தொடங்கி செய்துவருகிறார். கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம் எஸ்
தரணிவேந்தன் வடக்கு மாவட்ட கழக செயலாளராக இருந்து கழக பணியும், உள்ளாட்சி
பொறுப்பில் மக்கள் பணி செய்தவர் என்றும், இவருடைய குரல் ஆரணியின் குரலாக
டெல்லியில் உதைக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்
கொண்டார். இருவரையும் வெற்றி பெற வைக்க
நீங்கள் தயாராக வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஸ்டாலின் தூதுவனாக உங்கள்
பகுதியில் உள்ள மக்களிடத்தில் நீங்கள் வாக்கு கேட்க வேண்டும் என கேட்டுக்
கொண்டார்.
இந்தத் தேர்தல் களம் இரண்டாவது
விடுதலைப் போராட்டம் என குறிப்பிட்டவர், ஜனநாயக போர்க்களத்தில் பேரறிஞர் அண்ணா
சொன்னதை நான் நினைத்துப் பார்க்கிறேன் இந்த உலகத்தில் இரண்டு எஜமானர்கள் அதில்
ஒன்று மனசாட்சி, மற்றொன்று இந்த நாட்டு மக்கள் என்றும், முத்துவேல் கருணாநிதி
ஸ்டாலின் மனசாட்சி படி மக்களாட்சி நடத்துபவன் நான் என குறிப்பிட்டவர்
தமிழ்நாட்டைப் போலவே டெல்லியில் நல்லாட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் உங்கள்
ஆதரவை கேட்டு தற்போது வந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்தியா என்ற அழகிய நாட்டை
அழித்து விடாமல் தடுக்க ஜனநாயக சக்திகளும் இந்திய நாட்டு மக்களும் களம் கண்டுள்ள
இந்த ஜனநாயகப் போர்க்களத்தில் இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்
என கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டு மக்களின் எண்ணம்
என்னவாக உள்ளது என குறிப்பிட்டவர் தமிழ்நாட்டை மதிக்கிற அன்னை தமிழை அரியணை
ஏற்றுகிற இனத்தை இனத்தின் பண்பாட்டை மதிக்கிற தாய் நாட்டை பாதுகாக்க ஒரு பிரதமர்
வேண்டும் அப்படிப்பட்ட பிரதமரை தான் இந்தியா கூட்டணி வழங்கும் என தெரிவித்தார்.
நீங்கள் அளிக்கிற ஒவ்வொரு
வாக்கும் ஜனநாயகத்தை தமிழ்நாட்டின் எதிர்காலத்தை இளைஞர்களை மகளிர்களை எதிர்கால
தலைமுறை பாதுகாக்கும் என தெரிவித்தார்.
இந்தியாவில் சமூகநீதி நீடிக்க
வேண்டுமென்றும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் வேற்றுமையில் ஒற்றுமை தொடர
வேண்டும் எங்கும் சமத்துவம் தழைக்க வேண்டும் அரசியல் சட்டம் காப்பாற்றப்பட
வேண்டும் நாட்டின் பன்முகத் தன்மை தொடர வேண்டும் அதற்கு முதலில் பாஜக ஆட்சியை
வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக
ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் என நாட்டிலுள்ள அனைத்து குடிமகன்களும்
தயாராகி உள்ளதாகவும் இந்த நல்ல செய்தி திருவண்ணாமலை மட்டும் இன்றி தமிழகம்
முழுவதும் மட்டுமின்றி தென் மாநிலங்கள் வட மாநிலங்களில் இருந்தும் ஒட்டுமொத்த
இந்தியாவில் இருந்தும் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்த செய்தியை நன்றாக
உணர்ந்திருப்பவர் தோல்வி பயத்தில் பொய்யையும் பொருளையும் கிளப்பி மக்களை குழப்பி
வாக்குபெற நினைக்கிறார் பிரதமர் மோடி என தெரிவித்தார்.
தோல்வி பயத்தில் தனது கூட்டணியாக
உள்ள ஐடி துறையை விட்டு ஜூன் மாதம் வரை காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்
என தெரிவிக்கிறார்.இடியை விட்டு ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங்குக்கு பெயில்
கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இடி ஐடி சிபிஐ இதெல்லாம் போதாது என்று நாட்டு மக்களை
குழப்ப ஆர்டிஐ-யும் தனது கூட்டணியில் இணைத்துள்ளார் மோடி என தெரிவித்தார். இனிமேல் மோடி சொன்னால் மக்கள் நம்ப மாட்டோம் என
அறிந்த அவர் ஆர்பிஐ பெயரில் புரளியை கிளப்பி வருவதாக தெரிவித்தார்.
மோடி குரளி வித்தை காட்டுகிறார்
என்றும் அவர் குழப்பத்தில் உள்ளார் என்பதற்கு உத்திரபிரதேசம் சென்று கச்சத்தீவு
குறித்து பேசுவதில் தெரிவதாக குறிப்பிட்டார். மோடி அவர்களே இது ஏப்ரல் மாதம் தான் இன்னும் மே மாதம் ஜூன் மாதம்
உள்ளதாகவும், உங்கள் குழப்பங்கள் ஜூன் நான்காம் தேதி தீர்ந்துவிடும் என
குறிப்பிட்டார்.
பாஜக என்னும் மக்கள் விரோத
ஆட்சியிடமிருந்து நாட்டிற்கு விடுதலை கிடைத்து விடும் என குறிப்பிட்டார். ஜூன் மூன்றாம் தேதி தமிழின தலைவர் கலைஞரின்
நூற்றாண்டு நிறைவு விழா பிறந்தநாள் என்றும் ஜூன் நான்கு இந்தியாவின் புதிய விடுதலை
துவக்க நாள் என குறிப்பிட்டார்.
கலைஞர் எந்த ஜனநாயகத்தை காக்க
போராடினாரோ மதசார்பின்மை நிலை நாட்டினாரோ மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில்
சுயாட்சி தனது இறுதி மூச்சு வரை முழங்கினாரோ அவற்றை பாதுகாப்பது இந்தியா கூட்டணி
வெற்றி அவர் பிறந்த நாள் பரிசு வழங்குவோம் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசுகையில் சமீபத்தில்
வேஷ்டி சட்டை எல்லாம் போட்டுக்கொண்டு தமிழ் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி பேட்டி
என்ற பெயரில் சூட்டிங் செய்திருந்தார். அதில் கூட அவர் உண்மை பேசவில்லை என சுட்டிக்காட்டினார்.
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு
என பத்து ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருந்து எனக்
கூறியிருந்தால் அவருக்கு அவரை வாழ்த்தி இருக்கலாம் கருப்பு பணத்தை மீட்டு விட்டேன்
எனக் கூறியிருந்தால் பார்த்திருக்கலாம் அனைவரது வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய்
போட்டு விட்டேன் என கூறியிருந்தால் வாழ்த்திருக்கலாம் கைதட்டி இருக்கலாம் என்றார்.
உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்தி விட்டேன் என
கூறி இருந்தால் விலைவாசியை குறைத்து விட்டேன் நதிகளை இணைத்து விட்டேன் என
கூறியிருந்தால் தமிழ்நாட்டு மீனவர்கள்
கைதியை தடுத்து விட்டேன் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி
அமல்படுத்தி விட்டேன் நல்லபடியா அவரை வாழ்த்தி இருக்கலாம். ஆனால் அந்த பேட்டியில் இது போன்று எதுவும் இல்லை
தமிழ்நாட்டு மக்கள் கேட்பதாக
நானும் ஒவ்வொரு மேடையிலும் கேட்கிறேன் 10 கால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு
செய்த சிறப்பு திட்டம் எது என கேள்வி எழுப்பியவர் அந்தப் பேட்டி முழுமையாக
பார்த்தவர்கள் இது நியூஸ் டைம் அல்ல காமெடி டைம் என குழப்பத்தை ஏற்படுத்தியதாக
சுட்டி காட்டினார். மோடி அமலாக்கத்துறை நடவடிக்கைக்கும்
எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்ததால் பேட்டி எடுத்தவரே ஆடிப் போனதாக
சுட்டிக்காட்டினார்.
பிரதமர் அவர்களே ஜார்கண்ட்
முதல்வர் ேஹமந்த் சோரனை அது உங்களுக்கு தெரியாதா? டெல்லி முதல்வர் அரவிந்த்
கெஜ்ரிவாலை கைது செய்தது தெரியாதா என்றும் காங்கிரஸ் வங்கி கணக்கை முடக்கினார்களே
அதுவும் உங்களுக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பிய அவர் நாட்டில் ஐடி, இடி, சிபிஐ
என்ன செய்வது என்று தெரியாது என தெரிவித்தார். இது எல்லாம் உங்களுக்கு தெரியாது என்பதை நாங்கள் நம்பி விட்டோம்
இதையெல்லாம் நம்பி விட்டால் நாளை குஜராத்திற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தம்
இல்லை என்று சொன்னால் நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள் என சுட்டி காட்டினார். அப்படியெல்லாம் நாட்டு மக்களை தப்பு கணக்கு
போடாதீர்கள் என எச்சரித்தார்.
தமிழகம் அடுத்தடுத்து 2
பேரிடர்களை சந்தித்ததாகவும் 8 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டதாகவும்
பாதிப்புகளை சீர்செய்யவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதவி செய்யவும் 37ஆயிரம் கோடி
ரூபாய் வேண்டும் என கேட்டுயிருந்தோம் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பிரதமர்
ஆறுதல் கூறவில்லை கேட்ட நிதியும் கொடுக்கவில்லை ஆனால் பிரதமர் மோடியை சந்தித்தபோது
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுப்புவதாகவும் அதன் பின்னர் நிதி வழங்குவதாக
தெரிவித்தார். சொன்னபடி தமிழகத்திற்கு நிர்மலா
சீதாராமன் மட்டுமே வந்ததாகவும் ஆனால் நிதி வரவில்லை என சுட்டிக்காட்டினார். நிதியை ஒதுக்கீடு செய்யாமல் நிர்மலா சீதாராமன்
நீங்கள் கேட்கும் போதெல்லாம் சும்மா சும்மா நிதியை ஒதுக்க முடியாது என நக்கலாக
தெரிவித்தார்.
அவரின் பேச்சை பார்த்த பொழுது ஒரு
விஷயம் தெளிவாக புரிந்ததாக கூறியவர், அம்மையார் நிர்மலா சீதாராமனை எதற்காக நிதி
அமைச்சராக வைத்துள்ளார்கள் என்றால் இதுபோன்ற நக்கலாக பதில் கூறுவதற்கு தான்
வைத்துள்ளதாக தெரிவித்தார். உதவி செய்வதை பிச்சை என
கொச்சைப்படுத்தியவர் நிர்மலா சீதாராமன் என்றும் ஆணவ சிந்தனை கொண்ட நிர்மலா
சீதாராமன் நேற்று பேட்டி
அளித்துள்ளதாகவும் 5ஆயிரம் கோடியை தமிழகத்திற்கு கொடுத்து விட்டோம் என
கூறியுள்ளார். அதற்கு கணக்கு கொடுங்கள் என்று கந்துவட்டிக்காரன் போல் கேட்கிறார். முதலில் அது ஒன்றிய அரசு வழங்கி நிதி என்று அவரால்
கூற முடியுமா முடியாது வெளிநாட்டு வங்கிகள் தமிழ்நாட்டிற்கு கொடுத்த கடன் என்றும்
அந்த கடனையும் தமிழ்நாடு அரசு தான் திரும்ப செலுத்த வேண்டும் மக்களுக்கு புரியும்
வகையில் எடுத்துக் கூறுவதாக தெரிவித்தார்.