நூங்கு சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா?

Published: 04/04/2024 14:36 PM Updated: 04/04/2024 14:36 PM
Ads
news-banner

கோடைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றது, நுங்கு. நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது. மேலும் இது உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது. கோடைக்காலத்தில் குளிர்பானத்தை அருந்துவதை விட நுங்கு சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.

நுங்கு நன்மைகள்..! 

  1. * கோடை காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுப்பதில் நுங்கு நன்கு செயலாற்றும். அம்மை நோய் பாதித்தவர்களும் நுங்கு சாப்பிடலாம் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடும். 
  2. * உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவதில் நுங்கு வல்லமை கொண்டது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. 
  3. * வயிற்று கோளாறுகளை சரி செய்வதில் நுங்கு நல்ல பலனை தரும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய இரண்டு பிரச்சனைகளுக்கும் நுங்கு சாப்பிடலாம். குடல் புண்ணை குணமாக்கிவிடும். 
  4. * உடல் சூட்டினால் கடுமையாக அவதிப்பட்டு நீர்ச்சத்தை இழந்து வேதனைப்படுபவர்களுக்கு, நுங்கு அருமருந்து. இதை சாப்பிடும் போது தாகம் தணியும்.
  5. * ரத்த சோகை இருப்பவர்கள் நுங்கு சாப்பிட்டால் நல்ல பலனை காண்பார்கள். 
  6. * வயிற்றில் குழந்தைகளை சுமக்கும் கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால் அவர்களுடைய செரிமானம் துரிதமாகும். மலச்சிக்கல், அசிடிட்டி ஆகிய பிரச்சனைகள் இருந்தால் கூட அதிலிருந்து விடுபடுவார்கள். 
  7. * கோடைகால வேர்க்குருவை நீங்க செய்யும். நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீர்ச்சத்து அதிகமாகும். வெயிலினால் உண்டாகும் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். வெயில் காலங்களில் ஏற்படும் கொப்புளங்களையும், தோல் நோய்களயும் நுங்கு தடுக்கும்.
  8. * கல்லீரல் பிரச்னை, அஜீரணக் கோளாறு ஆகிய பிரச்னைகளுக்கு  நுங்கு நல்லது.