திண்டிவனத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான வாக்கு பதிவு

Published: 08/04/2024 09:55 AM Updated: 08/04/2024 09:55 AM
Ads
news-banner

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாண்போர்ட் பள்ளியில் நாடாளுமன்ற தேர்தல் மயிலம் செஞ்சி ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பணியாளர்களுக்குகான வாக்கு பதிவு நேற்று காலை நடைபெற்றது.

 

உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், சார் ஆட்சியருமான திவ்யான்ஷூ நிகம் மேற்பார்வையில் நடைபெற்ற வாக்கு பதிவின் முடிவில் வாக்கு பெட்டிகளுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதில் மயிலத்தில் 61 ஓட்டுகளுக்கு 54 ஓட்டுகள் பதிவாகியது செஞ்சியில் 98 ஓட்டுகளுக்கு 77 ஓட்டுகள் பதிவாகியது இரண்டு தொகுதிகளிலும் 159 ஓட்டுகளுக்கு 131 ஓட்டுகள் பதிவாகியது தேர்தலுக்கான ஏற்பாடுகளை கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாலமுருகன், பழனி, துணை வட்டாட்சியர்கள் ராதாகிருஷ்ணன்,ராஜ்குமார்,விஜயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். முன்னதாக அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் பணியாளர்களிடம் தகங்களின் சின்னத்திற்கு ஓட்டுகளை வழங்க வலியுறுத்தி வாக்கு சேகரித்தனர்.


திண்டிவனத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான வாக்கு பதிவுக்கு பின்னர் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டி பூட்டி சீல் வைக்கப்பட்டது.