செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில்
உள்ள ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனத்தின் சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு
1000 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி செஞ்சியில் நடைபெற்றது.
செஞ்சி பேரூராட்சி அலுவலகம்
அருகில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு கல்லூரியின் தாளாளர் ரங்க பூபதி தலைமை
தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். செஞ்சி அரசு மருத்துவமனை
செவிலியர் கண்காணிப்பாளர் ஷாகிராபானு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
விழிப்புணர்வு பேரணி செஞ்சி காந்தி கடை வீதி, திண்டிவனம் சாலை வழியாக அரசு
மருத்துவமனையை அடைந்தது. அங்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சி முடிவில் நர்சிங் கல்லூரி முதல்வர் மேனகா காந்தி நன்றி கூறினார்.
செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில்
உள்ள ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனத்தின் சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு
1000 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி
நடைபெற்றது