100க்கும் மேற்பட்டோர் தேர்தலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Published: 08/04/2024 14:51 PM Updated: 08/04/2024 14:51 PM
Ads
news-banner

தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்களுடைய முதலீட்டு பணத்தை மீட்டுத் தர எந்த அரசியல் கட்சிகளும் முன்வராததால்  தேர்தலை புறக்கணித்து தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம்  ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

 

தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் 8 ஆண்டு காலமாக முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து வரும் லோதா கமிட்டி மற்றும் செபியை கண்டித்து பலமுறை போராடியும் பணத்தை திரும்ப செலுத்தாததால் கடந்த மாதம் நாமக்கல் திருச்சி மாவட்ட எல்லையில் முதலீட்டு பண மீட்பு மாநாடு விவசாய முன்னேற்ற கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது

 

இந்த மாநாட்டில் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் களப்பணியாளர்கள் விவசாயிகள் கலந்து கொண்டு PACL நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை விரைந்து மீட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கின்ற கட்சிக்கே ஆதரவளிப்பது என்றும் தவறும் பட்சத்தில் தேர்தலை புறக்கணிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

 

 இந்த தீர்மானம் குறித்து அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டும் இன்று வரை எந்த கட்சியினரும் எங்களுடைய பணத்தை மீட்டு தர முன் வராததால் எங்களுடைய எதிர்ப்பை அனைத்து கட்சிகளுக்கும் தெரிவிக்கின்ற வகையில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்கவிருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

 

தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்களுடைய முதலீட்டு பணத்தை மீட்டுத் தர எந்த அரசியல் கட்சிகளும் முன்வராததால்  தேர்தலை புறக்கணித்து தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம்  ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.