அதிமுக பாஜக கள்ளக் கூட்டணி

Published: 10/04/2024 09:38 AM Updated: 10/04/2024 09:38 AM
Ads
news-banner

அதிமுகவும் பாஜகவும் கள்ள கூட்டணி வைத்துள்ளதாக கூறி மோடியிடம் எடப்பாடி பல்லை காட்டும் படத்தை வாக்காளர் இடம் காண்பித்து  மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

 

ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து மாநில மருத்துவர் அணி துணை தலைவரும் போளூர் தொகுதி பொறுப்பாளருமான டாக்டர் எ.வ.வே.கம்பன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார்.

 

அதன் ஒரு பகுதியாக போளூர் தொகுதிக்குட்பட்ட வெள்ளூர் ஆத்துவம்பாட, களம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று தீவிர பரப்பரை மேற்கொண்டார். தேர்தல் பரப்புரைக்கு வந்த டாக்டர் எ.வ.வே.கம்பனை மலர் மாலை அணிவித்தும் மேளதாளம் முழங்க கழக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நரேந்திர மோடியுடன் பல்லை காட்டும் போட்டோவை வாக்காளர்களிடம் காண்பித்து அதிமுகவும், பாஜகவும் கள்ள கூட்டணி இருப்பதை சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்தார்.

 

இந்த தேர்தல் பரப்புரையில் டாக்டர் எ.வ.வே.கம்பன் பேசியதாவது,

கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுப்படுத்த முடியாமல் இருந்ததாகவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக முதல்வர் பால் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளார் என்றும், தற்போது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் மத்தியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பெட்ரோல் லிட்டர் 75க்கும், டீசல் லிட்டர் 65க்கும், கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

 

அதே போன்று பெண்களுக்கு புதுமை பெண் திட்டத்தின் மூலமாக உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு உதவி வழங்குவது போன்று மாணவர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

 

இந்த தேர்தல் பரப்புரையில் ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து போளூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது எடப்பாடி மோடியிடம் பல்லை காட்டும் படத்தை காண்பித்து தீவிர பரப்புரையில் போளூர் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஈடுபட்டார். உடன் இளைஞரணி அமைப்பாளர் எவரெஸ்ட் நரேஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.