பானை சின்னத்திற்கு இறுதிக்கட்ட பிரச்சாரம் நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் வாக்கு சேகரிப்பு

Published: 17/04/2024 13:10 PM Updated: 17/04/2024 13:10 PM
Ads
news-banner

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் பானை சின்னத்திற்கு இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் வாக்கு சேகரித்தனர். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் துரை.ரவிக்குமாரை ஆதரித்து திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் திமுக நகர் செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் வீதி வீதியாக சென்று பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். 


அப்போது திமுக அரசு மக்களுக்கான நல்ல பல திட்டங்களை செய்து வருவதாகவும், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாகவும், 200 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும், மேலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், மகாலட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறி பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில்  பானை சின்னத்திற்கு இறுதிக்கட்ட பிரச்சாரம் நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் வாக்கு சேகரித்தனர்.