பேராவூர் கிராமத்தில் உள்ள கே.எம்.ஜோனி தொடக்க பள்ளியின் ஆண்டு விழா

Published: 17/04/2024 13:38 PM Updated: 17/04/2024 13:38 PM
Ads
news-banner
  

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பேராவூர் கிராமத்தில் இயங்கி வரும்  கே.எம்.ஜோனி  மழலையர் தொடக்பள்ளியின் 7 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழர்கள் முறைப்படி லெப்டினல் கர்ணல் டாக்டர்.ஜான்  (ராணுவத்துறை ஓய்வு), நிர்மலா ஜான் மற்றும் பள்ளி நிர்வாகி வர்கீஸ் மற்றும் தாளாளர் ஜோஷி ஷைலா பிரிஸில்லா ஆகியோர்களின் திருகரங்களால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு சிறப்புரை வழங்கப்பட்டது.

 

அதன் தொடர்ச்சியாக ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் மற்றும்  பிறதோழமை பள்ளி, கல்லூரி முதல்வர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

 

அதனைத் தொடர்ந்து மாணவர்களின்,  "த கிரேட் நோவா'ஸ் ஆர்க்" என்ற நாடகமும்,  மற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 

 

ஆண்டு விழாவின் நினைவு கே.எம்.ஜே.எம். பள்ளியின் பரிசாக நான்கு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் கே.எம்.ஜே.எம்.பள்ளியின் சார்பாக மிதிவண்டி இலவசமாக வழங்கப்பட்டதுடன், ஆண்டு விழா இனிதே நிறைவு பெற்றது.