திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன்
கோட்டை வீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ அறம் வளர் நாயகி சமேத ஸ்ரீ
கைலாசநாதர் ஆலயத்தின் சித்திரை மாத திருத்தேரை திமுக நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி வடம்பிடித்து
இழுத்து தொடங்கி வைத்தார்.
மேலும் கடந்த 2021-ம் ஆண்டு
31லட்சம் மதிப்பீட்டில் 32 அடி உயரம் 11அடி அகலம் கொண்ட புதிய தேர் செய்யபட்டன. பின்னர் புதிய திருத்தேரில் கைலாசநாதர் மற்றும்
விஷ்ணு ஆகியோரின் உற்சவ சிலைக்கு மலர்களால் அலங்கரிக்கபட்டு சிறப்பு தீபாரதனை
காண்பிக்கபட்டன.
இந்த திருத்தேரை பக்தர்கள் வடம்
பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். மேலும் இந்த திருத்தேர் பழைய பேருந்து நிலையம்
மண்டி வீதி பெரியகடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வீதி உலா அழைக்கபட்டன.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல்
பக்தர்கள் கைலாசநாதருக்கு அர்ச்சனை செய்து உப்பு உள்ளிட்ட பொருட்களை தேரின்
சக்கரத்தில் வைத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். இதில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ரவிசந்திரன் தலைமையில் போலீசார்
பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் திமுக ஆரணி தொகுதி
பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன் மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி ஒன்றிய செயலாளர்
சுந்தர் மாவட்ட பிரதிநிதி பாலமுருகன், சைதை முருகன் நெல் அரிசி வியாபாரிகள் சங்க
மு.தலைவர் நடராஜன் மற்றும் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேரை
வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.