செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்
தெற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்
திறப்பு விழா நடைபெற்றது.
இதயதெய்வம் புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இரு தெய்வங்களையும் வணங்கி
கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க சுட்டெரிக்கும் வெயிலின் பொதுமக்களின் தாக்கத்தினை தீர்க்க மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
மதுராந்தகம் தெற்கு ஒன்றியம்
சரவம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.கார்த்திகேயன் ஏற்பாட்டில் தண்ணீர்
பந்தல் திறப்புவிழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக
மகளிர் அணி செயலாளர்
முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருகழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் மதுராந்தகம்
சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மதுராந்தகம் ஒன்றிய குழு உறுப்பினர் கா.கீதா
கார்த்திகேயன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர்
உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்பூசணிபழம்,
வெள்ளரிக்காய் போன்றவற்றை வழங்கி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வின் போது மாவட்ட அம்மா
பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தாசலம், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா
கார்த்திகேயன், மதுராந்தகம் நகரக் கழக செயலாளர் பூக்கடை கே.சி.சரவணன், உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள்,
மகளிர் அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும்
ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.