விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

Published: 05/05/2024 13:00 PM Updated: 05/05/2024 13:00 PM
Ads
news-banner

கோடைவெயிலின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், நீர்மோர் பந்தல்களைத் திறந்து உதவ வேண்டும் என்று திமுகவினருக்கு கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனடிப்படையில் விழுப்புரத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டன.

 

விழுப்புரம் அடுத்த வளவனூர் பேரூராட்சிக்குட்பட்ட மார்க்கெட் வீதி நிழற்குடை அருகே வளவனூர் பேரூர் செயலாளர் ஜீவா ஏற்பாட்டின் பேரில், நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பந்தலை கள்ளக்குறிச்சி எம்பி கௌதமசிகாமணி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், குளிர்பானம், தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுவை சுரேஷ், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் டி என் ஜே சம்பத், பேரூராட்சி துணைத் தலைவர் அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்