திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த
சில மாதங்களாக தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. குறிப்பாக கடந்த இரண்டு
வார காலமாக தினந்தோறும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. பகல் நேரங்களில் முக்கிய
சாலைகளில் பொதுமக்களில் நடமாட்டம் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு
மையம் திருவண்ணாமலை வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில்
மழை பொழியும் என அறிவித்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம்
அதிகாலை 4:30 மணி முதல் திருவண்ணாமலை, நல்லவன் பாளையம், ஏந்தல், வேங்கிக்கால், அடி
அண்ணாமலை, அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது வரை பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக திருவண்ணாமலை
மாவட்டத்தில் வெப்பம் தணிந்து தற்போது கூழ்மையான சூழ்நிலை நிலவி வருகிறது.
காலை 7 மணிக்கு எல்லாம் வெயிலின்
தாக்கம் தொடங்கும் தற்போது மழை பெய்து வருவதால் ஊட்டி கொடைக்கானல் போன்று தற்போது திருவண்ணாமலை
சுற்றுவட்டார பகுதி காணப்படுகிறது பொதுமக்கள் மற்றும் திருவண்ணாமலை வாசிகள் இந்த அதிகாலை
மழை காரணமாக மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
அதேபோன்று விவசாயிகள் இந்த மழை
காரணமாக மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.