சேத்துப்பட்டு போலீஸ் கழகத்தில்
திருட்டை தடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் சாபுதீன்
ஆகியோர் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தற்போது கோடை காலம் என்பதால் வெய்யில் தாக்கம் அதிகமாக
உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் கதவை திறந்து வைத்துவிட்டு
காற்றுக்காக வெளியே படுத்து உறங்கும் போது உள்ளூர் மற்றும் வெளியூர் கொள்ளையர்கள்
உள்ளே புகுந்து விலைமதிப்பு மிக்க பொருட்களை திருடி செல்வது அசந்து தூங்கும்
பெண்களிடம் நகை மற்றும் தாலி போன்றவற்றை கொள்ளையடித்து செல்வது போன்ற நிகழ்வுகள்
நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவும் கிராமப்
பகுதியில் அறிமுகம் இல்லாத நபர்கள் சுற்றித்திரிந்தாலும், சந்தேகத்திற்குரிய நபராக
இருந்தாலும் சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும்
தங்களையும் தங்கள் உடமைகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சேத்துப்பட்டு காவல்
நிலையத்திற்கு உட்பட்ட தேவிகாபுரம், நெடுங்குணம், நம்பேடு, சவரப்புண்டி,
தச்சம்பாடி, பத்தியாவரம், சேத்துப்பட்டு, பழம்பெட்டை காமராஜர் பேருந்து நிலையம்
ஆகிய பகுதிகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் துணை
கண்காணிப்பாளர் நல்லு ஆகியோர் அறிவுறுத்தலின்படி சேத்துப்பட்டு காவல் நிலைய
இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப் இன்ஸ்பெக்டர் சாபுதீன் மற்றும் போலீசார்
பொதுமக்களுக்கு ஒலி பெருக்கிமூலம் விழிப்புணர்வுஏற்படுத்தினர்.