ஆரணியில் தனியார் பள்ளி வாகனம் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு

Published: 09/05/2024 14:19 PM Updated: 09/05/2024 14:19 PM
Ads
news-banner

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் வேலூர் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் நிகழ்ச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

 

சிறப்பு அழைப்பாளராக வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் டி.எஸ்.பி ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் ஆரணி மற்றும் சேத்பட்டு போளுர் உள்ளிட்ட ஊர்களில் செயல்படும் தனியார் பள்ளிகளிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை பேருந்துகளின் தன்மை குறித்தும் கேமரா அவசர நிலை கதவு வேகக் கட்டுப்பாடு கருவி முதலுதவி பெட்டிகளின் நிலை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், பேருந்து ஓட்டுநர்கள் மனிதாபி மானத்துடன் பேருந்தை இயக்க வேண்டும் பெற்றோர்கள் உங்களை நம்பி தான் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் அவசர நிலை கதவுகள் இயங்காத 5 பேருந்துகள் நிராகரிக்கப்பட்டு மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டதாக கூறினார்.

 

இதில் 120 பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

 

மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஏற்பாட்டில் தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். 

 

இந்த ஆய்வில் போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.