ஜேசிஐ திருவண்ணாமலை தீபம் சார்பில்
எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் மாதவிடாய்
சுழற்சி பற்றிய பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை தீபம் சார்பில் எஸ்கேபி
பொறியியல் கல்லூரியில் நேற்று மாதவிடாய் சுழற்சி
பற்றிய பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக டாக்டர்
விஜி உதவி பேராசிரியர் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் பங்கேற்றார்.
ஜேசிஐ திருவண்ணாமலை தீபத்தின் தலைவர் விவேக அரவிந்த வரவேற்புரை ஆற்றினார்.
எஸ்கேபி பொறியியல் கல்லூரியின்
முதல்வர் சிறப்பு விருந்தினரை வரவேற்றார். மேலும், லேடி ஜேசிஐ சேர்மன் சாந்தினி மற்றும்
திட்ட இயக்குனர் சம்ஹித நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். சிறப்பு விருந்தினர் மருத்துவர் விஜி கல்லூரி மாணவிகளுக்கு
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள்,
எவ்வாறு கையாள்வது, இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சுகாதார பட்டைகள் (சானிட்டரி
பேட்ஸ்) பயன்படுத்தும் முறை (ம) அவற்றை அதிக
நேரம் பயன்படுத்தினால் ஏற்படும் கிருமி தொற்றுகள் பற்றி ஆலோசனை வழங்கினார்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும்
மென்சுரல் கபின் முக்கியத்துவத்தை அறிந்திட செய்தார். அதன் தயக்கத்தையும் மக்களுக்கு
ஏற்பட்டிருக்கும் பயத்தையும் விளக்கிக் கூறினார். மேலும் 250 மாணவிகளுக்கு பருத்தியால்
செய்யப்பட்ட சுகாதார பட்டைகள் (சானிட்டரி பேட்ஸ்) வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின்
நிறைவாக செயலாளர் ேஜசி சருண் நன்றி உரை வழங்கினார்.