துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரம்...

Published: 20/04/2026 15:29 PM Updated: 20/04/2026 15:29 PM
Ads
news-banner

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும், துணை சபாநாயகருமான கு.பிச்சாண்டியை ஆதரித்து கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,

எடப்பாடி பழனிச்சாமி நான்காண்டு காலம் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த காலம் மிகப்பெரிய சாபக்கேடு என்றும் இன்றைய விலைவாசிக்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி, ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்ததால் தற்போது அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் 4 ஆண்டு கால ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாத பழனிச்சாமி தற்பொழுது முதல்வர் பதவி கொடுங்கள் என தமிழ்நாடு முழுவதும் பைத்தியக்கார தனமாக ஊர் ஊராக சுற்றித் திரிவதாகவும், வானத்தை வில்லாக  வலைப்பேன், மணலை கயிறாகத் திரிப்பேன் என கூறி எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதாக விமர்சனம் செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் திராவிட மாடல் 2.0 ஆட்சி வந்தவுடன் இல்லத்தரசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என பட்டியலிட்டார். மேலும்  கு.பிச்சாண்டி அமைதியானவர் உங்கள் வீட்டுப் பிள்ளை கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உங்களுக்கு சேவை செய்வார் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம், கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் அன்பு,பேரூராட்சி தலைவர் சரவணன்,துணைத் தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர்கள் சிவகுமார்,செல்வமணி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் நித்யா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆராஞ்சி சேகர், வேடநத்தம் குப்புசாமி, வழுதலங்குணம் தேவேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் அருள்மணி, அரிபாலன், சுதாகர், ஏழுமலை, சதீஷ்,செந்தில்,அவுல்தார், நகர நிர்வாகிகள் சின்னா, வினோத், பாக்யராஜ்,கே.பி.மணி,கேஸ்ராஜேஷ், கலைச்செல்வன்,ஜீவாமனோகர், உதயா,அம்பிகா ராமதாஸ், கனகாபார்த்திபன் உட்பட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள்,பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.