கலசபாக்கம் தொகுதிக்குப்ப்பட்ட
பகுதிகளில் திமுக வேட்பாளர் பெ.சு.தி.சரவணனை ஆதரித்து நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி
பரப்பரை செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம்
தொகுதிக்குட்பட்ட சி.கெங்கம்பட்டு, பனை ஓலைப்பாடி, அம்மாபாளையம், கீழ்ப்பாலூர், தென்மாதிமங்கலம்,
மேல்வில்வராயநல்லூர், ஆகிய ஊராட்சிகளில் திமுக வேட்பாளர் பெ.சு.தி.சரவணனை ஆதரித்து
நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது
அவர் பேசியதாவது,
நமது திமுக வேட்பாளர் பெ.சு.தி.சரவணன்
எளிமையானவர் மக்களை எளிதில் சந்திக்கக் கூடியவர் மிகவும் அமைதியானவர் மக்களுக்கு தேவையான
திட்டங்களை உடனுக்குடன் பெற்றுக் கொடுப்பவர் அது மட்டும் இல்லாமல் திராவிட மாடல் ஆட்சியில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்த திட்டங்களையும் சொல்லாததையும் செய்த திட்டங்களையும்
கூறினார், அப்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்காக இலவச விடியல் பயணம் வழங்கினார்.
பெண்களுக்கு கலைஞரின் மகளிர் உரிமைத்தவைத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ 1000 வழங்கினார்
அதை உயர்த்தி இப்பொழுது ஆட்சியில் அமர்ந்தவுடன் ரூ 2000 மாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது போன்ற பல்வேறு திட்டங்கள் சொன்னதை செய்த திட்டங்கள் மற்றும் சொல்லாமல் செய்த திட்டங்கள்
தாயுமானவர் திட்டத்தில் வயதான மூதாட்டியர்களுக்கு ரேஷன் பொருட்கள் அவரவர்கள் இல்லம்
தேடி வழங்கப்படுகிறது. அதேபோல் பிஜேபி, அதிமுக ஆகியவை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில்
வழங்கப்படும் ரூ 1000 வழங்குவதை நிறுத்தினால் பெண்கள் திமுகவையும் உதயசூரியனையும் மறந்திடுவார்கள்
என்று நினைத்து மகளிர் உரிமைத் தொகையை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம்
பிஜேபி மோடி அரசு நிறுத்துவதற்கு முயற்சி செய்தனர். அதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசி அனைவருக்கும் 13ம் தேதி காலை
7 மணிக்குள் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ 5000 வழங்கினார்.
அதேபோல் கலசபாக்கம் தொகுதியில்
பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நூற்றுக்கும் மேற்பட்ட மேம்பாலங்கள், சாலை வசதிகள் ஆகியவையை
அமைத்துக் கொடுத்து கலசபாக்கம் தொகுதியை வளர்ச்சியான தொகுதியாக மாற்றிய உங்களின் திமுக
வேட்பாளர் பெ.சு.தி.சரவணன் உங்களுக்காக உழைக்கும் அவரை நீங்கள் வெற்றி பெற வைப்பதற்கு
உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் கலசபாக்கம் தொகுதியை வளர்ச்சியான தொகுதியாக
மாற்றுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பாளராக அறிவித்துள்ளார். அதனால் திமுக
வேட்பாளர் பெ.சு.தி.சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வித்தியாசத்தில்
வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி,பரப்பரை செய்து
உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
நிகழ்ச்சியில் கலசபாக்கம் ஒன்றிய
செயலாளர்கள் அ.சிவக்குமார், வழக்கறிஞர் க.சுப்பிரமணியம், புதுப்பாளையம் ஒன்றிய செயலாளர்கள்
சி.சுந்தரபாண்டியன், கி.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பரசி ராஜசேகரன், இளங்கோவன்,
முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் மனோகரன், பட்டம்மாள் முனுசாமி, மாவட்ட இளைஞரணி துணை
அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மத்திய பிரசன்னா, மாவட்ட அமைப்புசாரா
ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் அன்பரசு, மாவட்ட பிரதிநிதிகள் முருகையன், ராஜா, தேவன்,
முருகன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் குப்பன் மஞ்சுளா அண்ணாமலை, ஜெயபிரகாஷ், கார்த்திகேயன்,
ரவிச்சந்திரன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ராஜா, ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர்
செந்தில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பூங்காவனம் ஜெயராஜ், பிரசன்னா, ஜெயந்தி
லட்சுமணன் (எ) சீனு, ஆனந்தன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பாரதிதாசன், பிச்சாண்டி,
முனியாண்டி, மஞ்சுளா சுதாகர், தணிகைமலை, ஆத்மா குழு தலைவர் முருகன், ஒன்றிய இளைஞரணி
அமைப்பாளர்கள் பாலாஜி, செல்வகுமார், ரவிச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள்
மணியழகன், மணவாளன், ராஜேஷ், தபசு, நவீன், பிரேம்குமார், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர்
சுரேஷ், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் முன்னாள் உள்ளாட்சி
பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.