தி.மலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தமிழ்நாடு பாரம்பரிய பராமரிப்பு குழு ஆய்வு

Published: 26/07/2026 07:28 AM Updated: 26/07/2026 07:28 AM
Ads
news-banner

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுவதால் வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு முழு வீச்சில் ஏற்பாடு செய்து வருகிறது.

அதன்படி நேற்று தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி.வினய் மற்றும் பாரம்பரிய பராமரிப்பு குழு தலைவர் நம்பிராஜன் ஆகியோர் தலைமையில் 5க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுடன் இணைந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மற்றும் பழமை வாய்ந்த கட்டடங்கள், திருக்கோவில் வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் பக்தர்கள் தங்கும் அறை, ராஜகோபுரம், 16 கால் மண்டபம், அன்னதானகூடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர், அண்ணாமலையார் கோவிலில் பழமை வாய்ந்த கட்டடக்கலைகள், கட்டடங்களில் பாரம்பரியம் மற்றும் பராமரிப்புகள் குறித்து அதிகாரியிடம் கேட்டு அறிந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பக்தர்கள் க்யூ காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் பரணிதரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.