கலசபாக்கம் தவெக அலுவலகத்தில்
தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற அரசு
பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் சான்றிதழ்கள்
வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம்
தமிழக வெற்றி கழகம் அலுவலகத்தில் நேற்று முன்தினம் லீப்செட் டிபன்ஸ் அகாடமியில் பயிற்சி
பெற்று தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று
சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம்
சான்றிதழ்கள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். நிகழ்ச்சியில் மாணவர்களின் சாதனையை
பாராட்டி பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், விளையாட்டுத் துறையில்
சாதிக்கும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், உயர்கல்விக்கான உதவிகளும்,
குத்துச்சண்டை பயிற்சிக்குத் தேவையான ஆதரவுகளும் தொடர்ந்து வழங்கப்படும். மேலும் தேசிய
மற்றும் சர்வதேச அளவிலான அடுத்த கட்ட போட்டிகளில் பங்கேற்று மேலும் பல சாதனைகள் படைக்க
நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் தவெக திருவண்ணாமலை
மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் சரண், லீப்செட் டிபன்ஸ் அகாடமி மாஸ்டர் வின்சென்ட் தாமஸ்,
பயிற்சியாளர் ஆனந்த், பொருளாளர் பரமேஸ்வரன், ஒன்றிய துணைச் செயலாளர் பிரியதர்ஷினி,
கிளைச் செயலாளர் பொன்மணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.