2024-நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம்
குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மகளிர் திட்டம்
சார்பில், 1000 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் ரங்கோலி கோலமிட்டும்,
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில், 700 அங்கன்வாடி மைய
பணியாளர்கள் ஒருங்கிணைந்து வாக்களித்தற்கான அடையாள மை சின்னம் உருவாக்கி தேர்தல்
விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்
சி.பழனி, பார்வையிட்டார்.
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக சாலையில்,
2024-நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, மகளிர் திட்டம் சார்பில், 1000 மகளிர்
சுய உதவிக்குழு உறுப்பினர்களால் ரங்கோலி கோலமிட்டும், ஒருங்கிணைந்த குழந்தை
வளர்ச்சித் திட்டம் சார்பில், 700 அங்கன்வாடி மைய பணியாளர்கள் ஒன்றிணைந்து
வாக்களித்தற்கான அடையாள மை சின்னம் உருவாக்கி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,தேர்தல்
பொதுப்பார்வையாளர் அகிலேஷ் குமார் மிஷ்ரா தேர்தல் செலவினப் பார்வையாளர் ராகுல்
சிங்கானியா, ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டார்.
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
தெரிவிக்கையில், 2024-நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, இந்திய தேர்தல்
ஆணையத்தின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் பணிகள் சிறப்பாக
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற
பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அடைந்திடும் வகையில், வாக்களிப்பதன்
அவசியம் குறித்து, பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களிடம் பல்வேறு
துறைகளின் சார்பாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்தொடர்
நிகழ்வாக, இன்றைய தினம், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மகளிர் திட்டம் சார்பில், 1000 மகளிர் சுய உதவிக்குழு
உறுப்பினர்களால் தேர்தல் தொடர்பான வாசகங்கள், வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு
படங்கள் உள்ளிட்ட ரங்கோலி கோலமிட்டு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை
பார்வையிடப்பட்டது. மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில்,
700 அங்கன்வாடி மைய பணியாளர்கள் ஒருங்கிணைந்து வாக்களித்தற்கான அடையாள மை சின்னம்
உருவாக்கி, என் வாக்கு, என் உரிமை என்ற தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை
பார்வையிடப்பட்டது. எனவே, தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, 100 சதவீதத்தை
நோக்கி விழுப்புரம் என்ற இலக்கினை நோக்கி அடைந்திடும் வகையில் விழுப்புரம்
மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்கினை செலுத்தி, ஜனநாயக
கடமை
நிறைவேற்றிடுவோம் 67601 மாவட்ட தேர்தல்
அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில்,
கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன்,மகளிர் திட்டம், திட்ட
இயக்குநர் பூ.காஞ்சனா, விழுப்புரம் நகராட்சி ஆணையர் திரு.ரமேஷ், மாவட்ட குழந்தை
வளர்ச்சி திட்ட அலுவலர் பார்கவி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.