ராக்கெட் வேகத்தை போல உயரும் தங்கத்தின் விலை 3 மாதத்தில் ரூ.5000 னா வரும் நாட்களில் அவ்வளவுதான்…!!

Published: 02/04/2024 12:19 PM Updated: 02/04/2024 12:19 PM
Ads
news-banner

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் வேளையில், இன்று பதிவான கணிசமான சரிவு உச்ச வெளியில் பெய்த மழைபோல் இருக்கிறது. ஆனாலும் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 5000 ரூபாய் உயர்ந்துள்ளது.
இதனால் இந்த ஆண்டு தீபாவளி, அட்சய திருதி, நவம்பர் - டிசம்பர் மாத திருமண சீசன் போது தங்கம் விலை பெரிய அளவில் உயரும் என சந்தை கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் உலகில் பல நாடுகளில் நடக்கும் பொதுத் தேர்தல் மற்றும் வளைகுடா நாடுகளில் ஏற்படும் பிர்சனைகள் காரணம் காட்டப்படுகிறது.  

இதைவிட முக்கியமாக அமெரிக்காவின் வட்டி விகித குறைப்பு தங்கம் விலை உயர்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியாகும் அமெரிக்க உற்பத்தி அளவீடுகள் மூலம் பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு 3 முறை வட்டி விகிதத்தைக் குறைக்குமா என்பதை உறுதி செய்யும். இன்று சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை யாரும் தொடர்ந்து ஒரு அவுன்ஸ் 2250 டாலருக்கும் அதிகமான விலையிலேயே உள்ளது. ஆனால் நேற்றை வர்த்தகத்திற்கும் இன்றைய வர்த்தகத்திற்கும் மத்தியில் அதிகப்படியான தடுமாற்றம் இருந்து வருகிறது. எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.64 சதவீதம் அதிகரித்து 68,767 ரூபாயாக உள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 1.35 சதவீதம் அதிகரித்து 76,551 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது ஜூன் மாத ஆர்டர்கள்
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் உயர்ந்து 61,350 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 490 ரூபாய் உயர்ந்து 66,930 ரூபாயாக உயர்ந்துள்ளது.